திங்கள், 1 ஜூலை, 2019

எம்.பி.யாக விரும்பாத வைகோ !! அதிர்ச்சியில் மதிமுக தொண்டர்கள் !

tamil.asianetnews.com - selvanayagam-p : மக்களவைத் தேர்தலின்போது திமுக மற்றும் மதிமுக இடையே ஏற்பட்ட தேர்தல் ஒப்பந்தப்படி வைகோவுக்கு
மாநிலங்களவை எம்.பி. பதவி தரப்படவுள்ள நிலையில் அந்தப் பதவியை ஏற்கப்போவதில்லை என அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுகவுக்கு ஈரோடு தொகுதியும், ஒரு ராஜ்யசபா எம்பி சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். இதையடுத்து ராஜ்யசபா எம்பி சீட் மட்டும் திமுக கூட்டணியில் தர வேண்டியுள்ளது.
இந்நிலையில் 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதில், மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ராஜ்யசபா எம்பி தேர்தலில் மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், வைகோ தான் போட்டியிடுவது குறித்து மதிமுக உயர்நிலை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

அதன்படி நாளை சென்னையில் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கும், மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச்  செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் ராஜ்யசபா எம்பி தேர்தலில் வைகோ போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படவிருக்கிறது. அதே நேரத்தில் ராஜ்யசபா எம்பி தேர்தலில் வைகோ போட்டியிட விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால்  மதிமுக தொண்டர்கள் வைகோ தான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் வைகோ போட்டியிடவில்லை என்றால் அக்கட்சியில் வேறு யார் போட்டியிடுவது என்பது குறித்து நாளையே முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை: