வெள்ளி, 5 ஜூலை, 2019

வரவு செலவு திட்டம் பற்றி கருத்து கூற சுப்பிரமணியம் சாமி திணறல்

sswamyதினமணி : இந்திய அரசியலில் தனக்கு மனதில்பட்ட கருத்தை பட்டென பளிச்சென பதில் கூறி சர்ச்சைகளில் சிக்கும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், பாஜக மாநிலங்களை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் குறித்து வழக்கம்போல் சர்ச்சையான கருத்தையே தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த முதல் மத்திய பட்ஜெட் குறித்து, ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். பொருளாதார நிபுணர்களும், அரசியல் ஆலோசகர்கள் பலரும் மத்திய பட்ஜெட்டின், சாதக, பாதகங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், சுப்பிரமணியன் சுவாமியோ, பட்ஜெட் குறித்து டுவிட்டர் பக்க பதிவில், நான் எந்த மக்கள் பக்கம் இருந்து இந்த பட்ஜெட் குறித்து கருத்து கூறுவது? ஒரு பொருளாதார பேராசிரியராக அணுகுவதா? அல்லது கட்சியின் எம்.பி. என்ற ரீதியில் இந்த பட்ஜெட்டை பார்ப்பதா? எந்தப் பக்க நியாயத்தை எடுத்துரைப்பது? என்று ஒரு பூடகமான பதிவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ஆனால், சுவாமியை உசுப்பேற்றும் விதமாக, ஐயா பொருளாதார மேதையே... தலை சிறந்த பொருளாதார பேராசிரியர் என்ற ரீதியிலேயே கருத்துக் கூறுங்கள் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் 20 ஆம் தேதி பதிவிட்ட டுவிட்டர் பதிவில், ‘‘சீனாவின் பிரபலமான சிங்குவா பல்கலைக்கழகம், வரும் செப்டம்பரில் என்னை அறிவார்ந்தோர் சபையில், ‘‘சீனாவின் பொருளாதாரம் - கடந்த 70 ஆண்டுகளின் ஆய்வு’’ என்ற தலைப்பில் உரையாற்ற வருமாறு அழைத்துள்ளது.
நமோ (நரேந்திர மோடி) என் கருத்துக்களை தெரிந்து கொள்ளவே ஆர்வமில்லாமல் இருப்பதால், நான் சீனாவுக்கு செல்வதுதான் சிறந்தது போலும்...’’ என்று கிண்டலாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ப்பிரமணியன் சுவாமி இப்போதும் ஹார்வர்டு, கேம்பிரிட்ஜ் என உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் கவுரவ பேராசிரியராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: