வெள்ளி, 9 ஜூன், 2017

பாஜகவின் மின்னணு இயந்திரம் .. இந்திய தேர்தல் ஒரு மோசடி! RSS கையில் நாடு படும் பாடு


A Somasundaran  :அட மானங்கெட்டனவங்களே இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொல்லையுமா அலையணும்.......! சாயம் வெளுத்தது:
பாஜகவுக்கு சாதகமாக எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்கள்!பாஜகவுக்கு வாக்குகள் விழும்படி எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்கள் வடிவமைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு தற்போது நிரூபணம் ஆகி உள்ளது.மத்திய பிரதேசத்திலிருக்கும் அடர் நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் 9 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அந்தத் தொகுதிக்கு அனுப்பப்படவிருக்கும் எலெக்ட்ரானிக் வோட்டிங் இயந்திரங்களின் செயல்பாடுகளை, அம்மாநில தேர்தல் அதிகாரி சலினா சிங் ஆய்வு நடத்தினார்.
அப்போது அதிகாரிகள் சுற்றி நிற்க எல்க்ட்ரானிக் இயந்திரத்தில் உள்ள 4 ம் எண்ணுள்ள பொத்தானை தேர்தல் அதிகாரி சலினா சிங் அழுத்தினார்.பின்னர் மெஷினுக்குள் இருக்கும் ரசீதை எடுத்துப் பார்த்தபோது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பாஜகவி்ன் தாமரைச் சின்னத்தில் வாக்குப் பதிவாயிருந்தது. அது டெக்னிக்கல் தவறாக இருக்கலாம் என நினைத்துவிட்டு ஒன்றாம் எண்ணுள்ள பொத்தானை அவர் அழுத்தியதும் மீண்டும் தாமரைச்சின்னத்தில்தான் வாக்கு விழுந்திருந்தது.இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், இந்த விசயத்தை வெளியில் சொல்லிவிடாதீர்கள். அப்படிச் சொன்னால் சிறைக் கம்பியை எண்ணவேண்டும் என பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் சொல்லியிருக்கிறார்.

🐼தேர்தல் அதிகாரி சலினா சிங் வாக்களிப்பது முதற்கொண்டு அனைத்தும் வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இச்சம்பவம் குறித்து டிவிட் செய்திருக்கும் அர்விந்த் கெஜ்ரவல், எலெக்ட்ரானிக் இயந்திரக் கோளாறு என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் பாஜகவுக்குச் சாதகமாக மட்டும் எப்படி இயந்திர கோளாறு உள்ளது என்று பதிவிட்டுள்ளார். எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்களில் கோளாறு செய்துதான் உத்தரபிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது என மாயாவதி, கெஜ்ரவல் உட்பட முக்கியமான கட்சி தலைவர்கள் சுட்டிக்காட்டியது உண்மை என நம்பும்படி உள்ளது இச்சம்பவம்.
🐴மத்திய பிரதேசத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஓட்டு போட்டு சோதனை பார்ததபோது அத்தனை ஓட்டுக்களும் பாஜகவுக்கு விழுந்தன..எலக்‌ஷன் கமிஷன் அதிர்ச்சி.. எதிர்கட்சிகள் கொந்தளிப்பு.....!
SOURCE : NDTV.

கருத்துகள் இல்லை: