சனி, 10 ஜூன், 2017

ஷாலின் மரியா லாரன்ஸ் : what is your surname? ஒரு பார்ப்பன பெண்ணின் வெட்கம் கேட்ட கேள்வி!

கோபாலகிருஷ்ண அயோக்கியன்
லதா கொலைகாரி
ராஜவர்மா கொள்ளைக்காரன்
மஹாலக்ஷ்மி திருடி
டேவிட் கொடும்பாதகன்
இப்படி யாராவது தங்கள் பெயருக்கு பின்னால் தங்களின் குற்றங்களை இணைத்துக்கொள்வார்களா ? இல்லை தங்கள் மூதாதையர் செய்த குற்றங்களை தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்துக்கொள்ளுவார்களா?
மாட்டார்கள் ….
ஆனால் இந்தியா என்கிற நாட்டில் ஆண்டாண்டு காலமாக இதை செய்து வருகிறார்கள் .அதை ஒரு பெருமை மிகுந்த செயலாகவும் செய்து வருகிறார்கள் .
1.தலையில் இருந்து ஒருவன் வந்தான் ,தோளில் இருந்து ஒருவன் வந்தான் ,தொடையில் இருந்து ஒருவன் வந்தான் ,இன்னொருவன் காலில் இருந்து வந்தான் ,மற்றவனோ இதில் எதில் இருந்தும் வந்தவன் இல்லை ஆகவே அவன் தீண்டக்கூடாதகாதவன் என்று பறைசாற்றும் மனுஅதர்மத்தின் வழி குறிப்பிட்ட சமூகங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கி ,கொடுமைகள் புரிந்து எய்த்து பிழைத்து வாழ்வை அமைத்து கொண்ட அத்தனை ஜாதிகளின் பெயரும் ஒவ்வொரு இழிச்செயலின் மறுபெயரே .

அப்படி இருக்க பெயருக்கு பின்னால் ஐயர் ,ஐயங்கார் ,பிள்ளை ,நாடார் ,முதலியார் ,சத்திரியன் ,தேவர்,வன்னியன் என்று சேர்த்துக்கொள்ளும் எவருமே தங்கள் குற்றங்களை பின்னால் சேர்ப்பவர் தான் .அசிங்கமான ஒரு விஷயத்தை பெருமையாக போட்டுக்கொள்ளுவது இந்த நாட்டில் மட்டுமே சாத்தியமாகிறது .
டேவிட் நாடார் = டேவிட் மகாபாதகன்
கோபாலகிருஷ்ண மேனன் =கோபாலகிருஷ்ண திருடன்
சுந்தரராமன் பிள்ளை = சுந்தரராமன் கங்காணி
மஹாலக்ஷ்மி ஐயர் =மஹாலக்ஷ்மி எய்த்து பிழைத்தவள்
ராஜா தேவர் = ராஜா கொலைகாரன் .
இது தான் பார்முலா .
ஆக எப்பொழுதெல்லாம் நான் ஒருவரின் பெயருக்கு பின்னால் ஜாதியை பார்கிறேனோ அப்பொழுதெல்லாம் அவர்கள் திகார் ஜெயிலிலுருந்து தப்பித்த குற்றவாளிகளாக ,சமூக விரோதிகளாக தான் பார்க்கிறேன் .
அதுமட்டுமல்ல கொலையாளி கொலை செய்துவிட்டு கொலை கருவியை கழுத்தில் மாட்டிக்கொண்டு ஓயாரமாக ஊர்வலம் போவது போன்றதுதான் ஜாதி பெயர் போட்டுக்கொள்ளுவது .அது அவர்கள் இன்னும் பாதிக்கப்பட்டவர்களை ஏளனமாக பார்க்கும் ஒரு விஷயம்தான் .நான் குற்றம் செய்தேன் ,அதற்காக வருத்தப்படவில்லை ,இன்னும் செய்வேன் ,உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்கிற அழுக்கு புத்தி அது .ஏகத்தாளம் அது .
2.அதேபோல் இன்னொரு விஷயம்.
சாதி என்கிற விஷயம் இந்திய அரசியலமைப்பு படி ஒரு கிரிமினல் குற்றம் .
Practising caste அதாவது சாதியை பேசுவது ,சாதி என்ற ஒன்றை நம்புவது ,அதை செயல்படுத்துவது சட்டப்படி குற்றம். It’s criminal to practice caste the caste system in India .
அப்படி இருக்க ஜாதி பெயரை பெயருக்கு பின்னால் போடுவதும் கிரிமினல் குற்றம் தான் .போடுபவரும் கிரிமினல் தான் .ஆக ஜாதி என்ற ஒன்றை நம்பி கொண்டு இருப்பது மட்டுமல்லாமல் அதை வெளியே சொல்லி கொள்ளுவது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது .இவர்கள் தான் உண்மையிலே’ anti-Indians ‘ .
Using caste name should be punishable under the law .Dot.
3 . படிக்காதவன் ஜாதியின் பெயரை போட்டு கொள்ளுகிறான் என்றால் கூட பரவாயில்லை ,ஆனால் நன்கு படித்து தெளிந்த உயர்ஜாதி அறிவாளிகளுக்கு ஜாதி என்கிற ஒரு விஷயம் பொய் என்று தெரியும்,பரிணாம வளர்ச்சி என்ன வென்று தெரியும் ,உண்மையில் மனிதன் எதிலிருந்து வந்தான் என்று தெரியும் ஆனாலும் கூட அவர்கள் இன்னும் ஜாதி பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் போட்டு கொள்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அந்த பெயர்களினால் சமூகத்தில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதை ,அந்தஸ்து .அதை வைத்து அவர்கள் பிழைத்துகொள்கிறார்கள் ,மற்றவர்களைஅடிமைப்படுத்துகிறார்கள் .
ஆக வர்ணாஸ்ரமம் பொய் என்று தெரிந்தும் கூட ஒருவன் ஜாதி பெயரை கட்டிக்கொண்டு திரிகிறான் என்றால் அவன் fraud என்று அர்த்தம் .forgery இல் ஈடுபடுகிறான் . இது இந்திய சட்டத்தின் படி 420 இல் சேரும் .
இங்கே வெறும் திவ்யாவாக சுற்றி கொண்டிருபவள் ,டெல்லிக்கு சென்றதும் திவ்யா ஐயர் என்று மாற்றி கொள்கிறாள் .ஏன் ? வடநாட்டில் ஜாதிக்கு கிடைக்கும் மரியாதை காரணமாக . This is an wonderful example of an fraudulent act.
பி .கு போனவாரம் முழுவதும் முகநூல் முழுக்க இதைப்பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்க நானும் இதை பற்றி எழுத வேண்டாம் என்று நினைத்தேன் .
ஆனால் மும்பையிலிருந்து சென்னை வரும் விமான பயணத்தில் ஒரு பார்ப்பனிய பெண் அரை மணி நேரம் என்னிடம் பேசிய பிறகு என் பெயரை கேட்காமல் “ what is your surname “ நேரிடையாக கேட்டது என் குடலை பிடுங்கியது .அதன் தொடர்ச்சியே இந்த பதிவு .
ஷாலின்

கருத்துகள் இல்லை: