புதன், 7 ஜூன், 2017

நீதிபதி கர்ணனின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது!

கர்ணனின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது!
நான்காவது முறையாக,கர்ணனின் மனுவை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 7 நீதிபதிகளுக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் மே 2-ஆம் தேதி ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பித்தார். உச்ச நீதிமன்றத்துடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் நீதிபதி கர்ணனின் மனநலம் குறித்து கொல்கத்தா அரசு மருத்துவமனையில் மே 4-ஆம் தேதி மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள 7 நீதிபதிகள் அமர்வு மே 2-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால் இதற்கு பதிலடியாக இந்த நீதிபதிகள் 7 பேருக்கும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடத்தி மே 7-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி கர்ணன் உத்தரவிட்டிருந்தார். ராஜஸ்தான் பார்பன நீதிபதி  மயில்கள் கண்கள் மூலம் உடலுறவு கொள்கின்றன என்று கூறியதை உண்மைதான் என்று கர்ணன் ஜால்ரா அடித்ததால்  அவரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று RRS இன் உச்சா நீதிமன்றம் இத்தால் ....

இந்நிலையில்,உச்ச நீதிபதிகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன், தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். இதனால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கர்ணனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னையில் முகாமிட்டிருந்த போதிலும், அவர் தலைமறைவாக உள்ளதால் கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில், தன் மீதான சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி நீதிபதி கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மே 9-ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் மே 19-ஆம் தேதி நிராகரித்துள்ளது.
இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவை ரத்துசெய்யுமாறு நீதிபதி கர்ணன் சார்பில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மே 21-ஆம் தேதி மனு அளிக்கப்பட்டுள்ளது. கர்ணன் சார்பில் அவரது மகன் சுகன், குடியரசுத் தலைவரின் செயலாளர் அசோக் மேத்தாவைச் சந்தித்து, 'அரசியலமைப்புச் சட்டம் 72-ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ என்று மனு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் கர்ணனின் மனுவை நிராகரித்துவிட்டார். மேலும்,தொடர்ந்து 4-வது முறையாக விடுத்த கோரிக்கையும் நீதிமன்றம் ஏற்கவில்லை. கர்ணனுக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு தான் சிறை தண்டனை விதித்தது எனவே அந்த அமர்விடம் தான் முறையிட வேண்டும். 2 பேர் கொண்ட அமர்வு அதை விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் அவர் இன்னும் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: