செவ்வாய், 6 ஜூன், 2017

மதிமாறன் : துணிவு இருந்தால் பிற்படுத்தப்பட்டவன் சாப்பாட்டில் கை வைடா..

அசைவ உணவில் யார் மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்கள்?
கல்யாணம், கருமாதி, தேவசம் முதல் தன் வாழ்வின் முக்கிய நடவடிக்கைகளுக்கு யாரெல்லாம் பார்ப்பனர்களை வைத்து சடங்கு செய்கிறார்களோ அவர்கள்.
பார்ப்பனர்கள் மாட்டை எப்படிப் புனிதமாகப் பார்க்கிறார்களோ அதற்குக் கொஞ்சமும் குறையாமல் மனிதனை இழிவாக்கி மாட்டை வழிபடுகிற பிற்படுத்தப்பட்டவர்கள்.
வரலாறு நெடுக பார்ப்பனியம் பிற்படுத்தப்பட்டவர்கள் வழியாகதான் தன் அதிகாரத்தை எப்போதும் உயர்த்திப் பிடிக்கிறது. பாதுக்காக்கிறது.
நிகழ்காலத்திலும் பெரியாரை இழிவாகச் சித்திரிக்கிற தலித் அறிவாளிகள், தமிழ் தேசியவாதிகள், இந்து அமைப்புத் தலைவர்கள் பார்ப்பனியத்தை உயர்த்தி, பரிந்துரைப்பது பிற்படுத்தப்பட்டவர்களைப் போல் பார்ப்பனிய அடிமை வாழ்வை வாழத்தான். இவர்களும் மாட்டுக்கறி சாப்பிடுவதை ஆதரிப்பதில்லை.
சைவ உணவை கொண்டாடுகிற, அசைவ உணவையே இழிவாகப் பேசுகிற பார்ப்பனர்கள், ஏன் மாட்டுக்கறிக்கு மட்டும் தடை கோறுகிறார்கள்?
‘அசைவ உணவிற்குத் தடை’ என்றால் தங்கள் அடிமைகளான பிற்படுத்தப்பட்டவர்களின் விரோதத்தை எதிர் கொள்ள வேண்டும். பிறகு அடுத்த ஒரு மணிநேரத்தில் பார்ப்பனியம் முற்றிலுமாக வீழ்த்தப்படும்.
‘மாட்டுக்கறி தடை’ என்பது மாடுகள் மேல் கொண்ட அன்பல்ல, மனிதர்கள் மேல் கொண்ட வெறுப்பு. அது தலித்- முஸ்லிம் எதிர்ப்பின் குறியீடு. பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகளைப் பெரும்பான்யைாகப் பெறுவதற்கான தந்திரம்.

சரி. ஆனல் கேரளாவில் மட்டும் ஏன் மாட்டுக்கறி தடைக்கு இவ்வளவு எதிர்ப்பு?
ஏனென்றால் இந்தியாவிலேயே பிற்படுத்தப்பட்டவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிற ஒரே மாநிலம் கேரளா. நாயர் போன்ற ஆதிக்க ஜாதிகள் வரை மாட்டுக்கறி குடும்ப உணவு. சி.பி.எம் மட்டுமல்ல பா.ஜ.க. வே மாட்டுக்கறி தடையைக் கேரளாவில் எதிர்க்கதான் செய்வார்கள்.
பிற்படுத்தப்பட்டவர்களின் உணவு பழக்கத்தில் கை வைத்தால் நாடே நடுங்கும். அதான்.
அதனால் ஆளும் சி.பி.எம். மாட்டுக்கறி தடையை எதிர்க்காவிடில் அவர்கள் ஆட்சிக்கே ஆபத்து.
இந்து புனித மாட்டுக்கறி அரசியலுக்கு எதிராக மற்ற மாநிலங்களில் சி.பி.எம். நிலை என்ன என்பதை வைத்துதான் அவர்களின் இந்து எதிர்ப்பு அரசியலின் யோக்கியதையைத் தீர்மானிக்க முடியும்.
பார்ப்பன அடிமைகளான பிற்படுத்தப்பட்டவர்களின் உணவுமுறைக்கு எதிராக, மாட்டுக்கறி தின்பதை இழிவாகப் பார்க்கிற அவர்களின் இந்து அரசியலுக்கு எதிராக இந்தியாவிலேயே ‘மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்’ நடத்திய மாநிலம் தமிழகம் மட்டும்தான்.
அதை நடத்திய ஒரே தலைவர் தந்தை பெரியார்.

கருத்துகள் இல்லை: