வியாழன், 8 ஜூன், 2017

Adnan Khashoggi ஆயுத வியாபாரி அட்னான் கசக்கி மரணம் .. முன்னாள் பிரதமர் சந்திரசேகர், சந்திரா சுவாமி, சுப்பிரமணியம் சாமி ... நெருங்கிய நண்பர் .

Among the many people he counted as friends was godman Chandraswami, who passed away last month. His visit to India in 1991, when he was hosted by then Prime Minister Chandra Shekhar in his private retreat in Bhondsi, Haryana, created quite a stir.
சவுதி அரேபியாவின் ஆயுத வியாபாரி  லண்டனில் மரணம்!மின்னம்பலம் : சவுதி அரேபியாவின் ஆயுத வியாபாரியாக இருந்த அத்னன் காஷோகி என்பவர் தன்னுடைய 82ஆவது வயதில் லண்டனில் மரணமடைந்தார். இவர் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக அறியப்பட்டவர். இவரின் சொத்து மதிப்பு 2.4 பில்லியன் பவுண்டுகளாகும்.
பல்வேறு நாடுகளுக்கிடையே நடக்கும் ஒப்பந்தங்கள் மூலமாக அதிகமான கமிஷன்களைப் பெற்று பணம் சம்பாதித்தவர் அத்னன் காஷோகி. இவர் தன்னுடைய 82ஆவது வயதில் லண்டன் நேரப்படி செவ்வாய்க்கிழமைஇரவு மரணமடைந்தார். மேலும், இவர் பார்கின்சன் என்ற நோய்க்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் இறந்துள்ளார் என்று அவருடைய குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அத்னன் காஷோகி தன்னுடைய 21ஆவது வயதில், முதல் பிரதான ஒப்பந்தத்தை மீறி, கலிபோர்னியாவில் உள்ள சிகோ ஸ்டேட் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் இவர் தன்னுடைய படிப்பை தொடராமல் எகிப்துக்கு மூன்று மில்லியன் டாலர் மதிப்பில் லாரிகளை விற்பனை செய்தார். அந்த விற்பனையில் அவருக்கு $ 150,000 கமிஷன் கிடைத்தது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. அதன்பிறகும் இவர் படிப்பை தொடருவதற்காக கல்லூரிக்கு வரவில்லை.

தற்போது லாக்ஹீத் மார்ட்டின் என்று அறியப்படும் நிறுவனம், அதற்குமுன் லாக்ஹீத் கார்ப்பரேஷன் என்ற பெயரில் இருந்தது. அந்த நிறுவனத்துடன் இவர் வேலை செய்த சமயத்தில்தான், 1970 மற்றும் 1980-களில், ஐக்கிய அமெரிக்க நிறுவனங்களுக்கும், சவுதி அரேபியாவுக்கும் சர்வதேச ஆயுத பேரங்களை நடத்தினார். அப்போது அவருக்குக் கிடைத்த பணத்தின் மதிப்பு 2.4 பில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ.23,623 கோடி). இதன்மூலம்தான் இவர் உலகின் பணக்கார நபர்களில் ஒருவராக அனைவராலும் அறியப்பட்டார்.
அதன்பிறகு, இவர் சில மோசடிகளில் ஈடுபட்டார். மேலும் அவருக்கு வணிக ரீதியாகவும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. எனவே அவருக்குத் தன்னிடமிருந்த டி.சி.9 என்ற விமானத்தை விற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதேபோல் 1980-களில், அவர் தனது நபிலா என்ற பிரமாண்டமான படகை புரூனையைச் சேர்ந்த சுல்தானிடம் விற்றார். அவர் அந்தப்படகை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்புக்கு $ 29 மில்லியன் (தோராயமாக ரூ.180 கோடிக்கு) விற்றுவிட்டார். எனவே நபிலா என்ற கப்பல் ட்ரம்ப்பின் இளவரசி என்ற பெயரைப் பெற்றது.
1997ஆம் ஆண்டில், காஷோகி 37 ஓவியங்களை கடத்தப்பட்டதாக, பிரான்ஸ் நாட்டில் குற்றம்சாட்டப்பட்டார். எனவே அவர் $ 1.6 மில்லியன் அபராதம் (சுமார் 10 கோடி ரூபாய்) செலுத்தும்படி அவருக்குப் பிரான்ஸ் அரசு கட்டளையிட்டது.
அவரது விருந்துகள் அனைத்தும் புகழ்பெற்றவையாக இருந்தன. பெரும்பாலும் அவருடைய வணிகம் பல நாள்கள் நீடிக்கும் என்ற சர்ச்சை எப்போதும் இருந்துவந்தது. அவரது கடைசி நாள்களில் அன்பான குடும்பம், குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளால் சூழப்பட்டு, நேர்த்தியாகவும், வலிமையாகவும் கௌரவத்தோடு அவர் வாழ்ந்தார்.
நன்றி: Scroll.in
மொழியாக்கம்: ஆரோன்

கருத்துகள் இல்லை: