திங்கள், 5 ஜூன், 2017

வேட்டி கட்டிய மாணவரை தேர்வெழுத அனுமதிக்காத கண்காணிப்பாளர்.! அதிர்ந்துபோன மதுரை கலெக்டர்.!

மதுரையில் வேட்டி கட்டி சென்ற மாணவருக்கு தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலை தூரக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இன்று பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. மதுரையில் உள்ள அரசரடி இறையியல் கல்லூரியில் திருமங்கலம் அருகே உள்ள கல்லணை கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்ற மாணவன் தேர்வெழுத சென்றுள்ளார். அப்போது தேர்வு அறையில் கண்ணன் தேர்வெழுத தயாராக இருந்தார். அங்கு வந்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவன் வேட்டிக் கட்டிக்கொண்டிருப்பதை பார்த்து அவரை தேர்வு எழுத அனுமதிக்காமல் வெளியேற்றியுள்ளார். இதனால் மாணவன் கண்காணிப்பாளரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஏன் பல்கலைக்கழக விதியில் வேட்டி கட்டி வரக்கூடாது எதாவது இருக்கின்றதா என்று கேட்டுள்ளார். ஆனாலும் மாணவன் சொன்னதை கண்காணிப்பாளர் ஏற்றுக்கொள்ளாமல் தேர்வு அறையிலிருந்து மாணவனை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளார்.
இதனையடுத்து மாணவன் தேர்வு அறையை விட்டு வெளியே வந்து நடந்தவற்றை ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் மாணவனை சுற்றி சூழ்ந்து கொண்டனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி மூலம் இளங்கலை நூலகவியல் படித்து வருகிறேன்.

இந்த பருவத்தேர்வில் இதுவரைக்கும் 4 தேர்வுகளை எழுதிவிட்டேன். கடைசி தேர்வு இன்று நடைபெற இருந்தது. ஆனால் நான் வேட்டி அணிந்து வந்ததால் எனக்கு அனுமதி மறுத்து வெளியேறும்படி கண்காணிப்பாளர் தெரிவித்துவிட்டார். மேலும், வேட்டி தமிழர்களின் ஆடை இல்லையா, அல்லது வேட்டி அணிந்து வந்தது குற்றமா என்று ஆவேசமாக பேசினார். இது பற்றி மாவட்ட கலெக்டருக்கும் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் வேட்டி தகவல் சென்றது. இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மறுபடியும் ஜல்லிக்கட்டு பிரச்சனை போன்று  மாணவர்கள் போராட்டம் நடத்தி விடுவார்களோ என்று அச்சத்தில் உள்ளார்.  liveday

கருத்துகள் இல்லை: