செவ்வாய், 6 ஜூன், 2017

ரிக் வேதம் : இந்திரனுக்கு பிடித்த இறைச்சி பசு, குதிரை, எருமை ஆகியனவாம் .. இந்திரன்தான் பார்ப்பனர்களின் கடவுள்.

"பெண்களின் திருமண வைபவங்களில் பசு மாட்டையும் #காளை மாட்டையும் அறுக்க வேண்டும்" என்றெல்லாம் ரிக் வேதம். (10/85/13) சொல்வதையும் .... "இந்திரனுக்கு பிடித்த இறைச்சி #பசு, பசுவின் கன்று, குதிரை, எருமை ஆகியவனவாம்" என்றெல்லாம்- ரிக் வேதம் (6/17/1)
Venkat Ramanujam: பசுவுக்கு நீதி கொடுக்க மனு நீதி சோழன் மகனை தேர் ஏற்றி கொன்ற பிறந்த நாட்டிலே #dravidanadu திராவிடர்கள் பசுவின் சிசுவை கொல்கிறார்கள் (post in pic format in first comment) ஐயகோ என்று குளுகுளு ஐஸ் கிரீம் போல உருகி தள்ளுகிறாரே பெரியவர் Prakash Ramasamy இதற்கு மசமவென பேசி கொண்டு இருக்காமல் சட்டுபுட்டுன்னு #விளக்கம் கொடுக்க உம்மால் முடியுமா #சவெரா ..
இதற்கு விளக்கம் கொடுக்க முடிகிற அளவுக்கு அறிவாளிஇல்லை எனபதால் இதனை பற்றி நம்மை விட அறிவில் சிறந்தவர்கள் மற்றும் புனித #நூல்கள்ன்று அறிவில் ஏற்றப்பட்ட இதிகாச வேத நூல்கள் என்ன சொல்லுகிறது எனபதை தொகுத்து தந்தால் அவர்கள் படித்து திருத்தவர்களா என்றெல்லாம் எண்ணாமல் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற கோட்பாட்டின் படி கூறி விடலாம் ..
"இந்து வேதங்களின்படி, மாட்டிறைச்சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது" என்று சொன்னவர் #விவேகானந்தர் (The Complete Works of Swami Vivekanand, vol.3, p. 536)..

"மிக மிருதுவாகவும், சுவையாகவும் இருப்பதால் பசு மாட்டிறைச்சியை உண்கிறேன்" என்று சொன்னவர் இராமாயணத் தின் மகரிஷி யாக்யவல்க்கியர் (சீதையின் தந்தையின் குரு) சத்பத் பிராமணம் (3/1/2/21)"..
"ஒரு #பிராமணர், வழிபாட்டின்போது தனக்குக் கொடுக்கப்பட்ட இறைச்சியை உண்ண மறுத்தால் நரகம் செல்வார் என்று சொன்னவர் வசிஷ்ட முனிவர்
(11/34)..
"#விருந்தினர் வந்தால் பசு மாட்டின் இறைச்சி அளிப்போம்" என்றெல்லாம் அபஸ்தம்ப கிரிசூத்திரம் (1/3/10) என்று சொல்வதையும் பாருங்கள் ..
"பெண்களின் திருமண வைபவங்களில் பசு மாட்டையும் #காளை மாட்டையும் அறுக்க வேண்டும்" என்றெல்லாம் ரிக் வேதம். (10/85/13) சொல்வதையும் ....
"இந்திரனுக்கு பிடித்த இறைச்சி #பசு, பசுவின் கன்று, குதிரை, எருமை ஆகியவனவாம்" என்றெல்லாம்- ரிக் வேதம் (6/17/1) சொல்வதையும் பாருங்கள்..
"பரோபகரம் இடம் ஷரீரம்" என்பது இந்து தர்ம சாஸ்திரத்தின் கூற்றாகும். அதாவது இவ் உடல் இறைவனால் கொடுக்கப்பட்டதே, பிறருக்கு உதவவே! அதன் அடிப்படையில் "இறைச்சிக்குரிய மிருகங்களை மனிதர்கள் உண்ணுவது பாவமில்லை. உண்ணுபவர்களையும் உணவுகளையும் பிரம்மனே படைத்தான்."
என்றெல்லாம்- #மனு ஸ்மிருதி (பாகம் 5 / வசனம் 30) சொல்வதையும் ..
"அறுத்துப் பலியிடும் இறைச்சியை உண்ணாத மனிதன், 21 ஜென்மங்களுக்கு, பலியிடும் விலங்காக உருவெடுப்பான். என்றெல்லாம் மனு #ஸ்மிருதி (பாகம் 5 / வசனம் 35) சொல்வதையும் பாருங்கள் ..
இவ்வளவையும் படித்து பார்த்து பின்னர் அய்யகோ #திராவிடம் பசு சிசு என்றெல்லாம் குளு குளு ஐஸ் கிரீம் மீண்டும் உருகினால் துடைத்து கொள்ள கைக்குட்டை கொடுத்து விடுங்கள் காரணம் அவர்களுக்கு உபயோகம் என்றால் கொடுப்பதில் தப்பில்லை என்பார்கள் அவர்கள் ..

4 கருத்துகள்:

Atmarama kesava das சொன்னது…

///"பெண்களின் திருமண வைபவங்களில் பசு மாட்டையும் #காளை மாட்டையும் அறுக்க வேண்டும்" என்றெல்லாம் ரிக் வேதம். (10/85/13) சொல்வதையும் .... "இந்திரனுக்கு பிடித்த இறைச்சி #பசு, பசுவின் கன்று, குதிரை, எருமை ஆகியவனவாம்" என்றெல்லாம்- ரிக் வேதம் (6/17/1) ////////////

முதல் வசனமே தவறானது!

ரிக் வேதம் (10/85/13) "பெண்களின் திருமண வைபவங்களில் பசு மாட்டையும் காளை மாட்டையும் அறுக்க வேண்டும்" - என்று சொல்லப்படவில்லை. மாறாக, அது மண பெண்ணை காளைகள் பூட்டிய வண்டியில் கணவன் வீட்டிற்கு அனுப்புவதை பற்றி சொல்கிறது.

அடுத்து ரிக் வேதம் (6/17/1 "இந்திரனுக்கு பிடித்த இறைச்சி பசு, பசுவின் கன்று, குதிரை, எருமை ஆகியவனவாம்". என்று சொல்வதாக என்று திரித்து சொல்லப்பட்டுள்ளது. மாமிசம் தின்பதை பற்றி எதுவுமே இல்லை.

இதோ அதன் மொழிபெயர்ப்பு ..
'உக்கிரமான இந்திரனே ! நீ எந்த சோமத்தால் ஊக்கமாகி, பணிகளால் திருடப்பட்ட பசுக்களின் பரந்த மந்தையை கண்டுபிடித்தாயோ, எதனால் வைசிரம் (ஆயுதம்) ஏந்துபவனும், பகைவர்களை ஜெயிப்பனுமான நீ, எதிர்க்கும் எல்லா பகைவர்களையும் உன் சக்தியால் ஜெயித்தாயோ, அந்த சோமா ரசத்தை எங்களால் நீ போற்றப்பட்டு பருகவும்' என் சொல்கிறது .


இதில் எங்கே பசு கொல்லப்பட்டதாக வருகிறது ?

இப்படி உள்ள பெரும்பாலும் தவறான வசனங்களை தான

Atmarama kesava das சொன்னது…

மேலும் மனு -5-51 'பிராணிகளைக் கொல்பவன்,கொல்ல சொல்பவன், வெடடுபவன் வாங்குபவன்,விற்பவன்,பரிமாறுபவன்,சாப்பிடுபவன இவர்கள் அனைவரும் கொடியவர்கள் மற்றும் பாவத்தை சேர்ப்பவர்கள்' என்கிறது.

மேலும் மனு -5-55 'இவ்வுலகில் எதனுடைய மாமிசத்தை ஒருவன் உண்கிறானே, அது வேறு பிறவியில் அவனுடைய மாமிசத்தை உண்ணும் என்பதே மாமிசம் என்பதன் பொருள்.'

மேலும் மனு 49 ல் 'மாமிச ஆசையின் காரணமாக ஒருவன் பிராணிகளை பிடிக்கவும் கொல்லவும் தூண்டுகின்றன. இதை எண்ணிப் பார்த்து ஒருவன் மாமிசம் உண்பதை கைவிட வேண்டும்' எனகிறார்.

இப்படி மனு கூறியுள்ளார். மேலும் இது ஒருவனுடைய குணமாகிய தமோ குணம், ரஜே, சத்வ குணங்களை உடையவனின் உணவைப் பற்றியும் கூறுகிறார்.
தமோ குணத்திலுள்ளவனுக்கு மாமிசம் சாப்பிட ஆசை உண்டானல் அவன் அதை தேவர்களுக்கு பலியிட்டு பின்பு சாப்பிட சொல்கிறார். இது ஏனெனில் அப்போது தான் அவனது புலன் ஆசைகளை படிப்படியாகக் குறைக்கவே தான் இப்படி மனு சில இடங்களில் சில மனிதர்களுக்காக சொல்லப்பட்டது. ஆனால் சத்வ குணத்தலுள்ளவன் இதை விலக்கி இருப்பதையும் கூறுகிறார்.

முடிவு நமது கைகளில் தான்.

Atmarama kesava das சொன்னது…

வேதங்களில் விலங்குகளை கொல்ல அனுமதிக்கவில்லை. இதோ வேத ஆதாரம்...

ப்ரீஹிமட்டம் யவமட்டமாதோ மாஷமாதோ திலம்
ஈஷா வாம் பாகோ நிஹிதோ ரத்னதேயாய தந்தெள மா ஹின்சிஷ்டம்
பிதரம் மாதரம் ச
அதர்வ வேதம் – 6.140.2
“ஏ பற்களே! நீங்கள் அரிசியை, வாற்கோதுமையை, பருப்பு வகைகளை, எள்ளை உண்கிறீர்கள். இவைகளே உமக்காக ஏற்பட்டவை. தாய் தந்தையராக முடியும் எதையும் கொல்லாதீர்கள்”

யா ஆமம் மான்ஸமதந்தி பௌருஷேயம் ச யே க்ரவீ:
கர்பான் காதந்தி கேஷவாச்டாநிதோ நாஷயாமசி
அதர்வ வேதம் – 8.6.23
“நாம் சமைத்த இறைச்சி, பச்சை இறைச்சி, ஆண்-பெண் பாலர்களின் அழிவினால் ஏற்பட்ட இறைச்சி, கரு, முட்டை இவைகளை உண்பவர்களை அழிக்க வேண்டும்”

அனகோ ஹத்யா வை பீம க்ரித்யே
மா நோ காமஷ்வம் புருஷம் வதீ:
அதர்வ வேதம் – 10.1.29
“வெகுளியானவற்றைக் கொல்வது கண்டிப்பாக பெரும் பாவமே. நம் பசுக்களையும், குதிரைகளையும், மக்களையும் கொல்லாதீர்”!

.'அக்ஃன்யா யஜமானஸ்ய பஷூன்பஹி:'...யஜுர் வேதம் – 1.1
“ஓ மனிதனே – மிருகங்கள் அக்ஃன்யா – அழிக்கப்படக் கூடாதவை. அவைகளைக் காப்பாயாக”

'பஷுன்ஸ்த்ராயேதாம்' ....யஜுர் வேதம் – 6.11
“மிருகங்களைக் காப்பீர்”

'த்விபாதவா சதுஷ்பாத்பாஹி' ....யஜுர் வேதம் – 14.8
“இரண்டு கால், நான்கு கால் ஜீவன்களைக் காப்பீர்”


இப்படித் தெளிவாக வேதங்களில் மிருக வதை தடை செய்யப்பட்டிருக்கையில் எவ்வாறு இச்செயல்கள் வேதங்களில் ஊக்குவிக்கப்பட்டிருப்பதாய்ச் சொல்கிறார்கள்?

Unknown சொன்னது…

ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் யாருக்கு பாவி பாலத்தை செலுத்த வேண்டும் என்று ஒருவர் கேட்கும் போது அதற்கு எல்லாத்தையும் விட உயர்ந்த ஒரு கடவுளுக்காக வேண்டி செலுத்துங்கள் என்று கூறப்பட்டதாக வருகிறதே இது உண்மைதானா