ஞாயிறு, 4 ஜூன், 2017

எந்திரன்- 2 .0 அதிக கிராபிக்ஸ் காட்சிகளுடன் 15 மொழிகளில் மாற்றம்... பிளாக் டிக்கெட் தடையில்லாம...

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் 2.0 படத்தை 15 மொழிகளில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அது குறித்த செய்தியை பார்ப்போம்... ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘2.0’. ‌ஷங்கர் இயக்கி இருக்கும் இதில், அக்‌ஷய் குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இதன் கிராபிக்ஸ் மற்றும் நவீன தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. இதில் எராளமான ஹாலிவுட் நிபுணர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ரூ. 400 கோடி செலவில் தயாராகி வரும் இதை அடுத்து ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். சனி அருவியை  கூப்பிட்டு  அதன்  விஷக் கருத்துகளில் மகிழ்வது   ஊழ்வினைதான் ...சொறியும் போது சற்று சுகமாகத்தான் தெரியும் .. அப்புறம்தான் புரியும் வலி ...  
கிராபிக்ஸ் காட்சிகள் மிக பிரமாண்டமாக உருவாக்கப்படுகிறது. ‘பாகுபலி’, படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இது போல் பல்வேறு நாடுகளில் சாதனை படைத்த ‘தங்கல்’ படம் தற்போது சீனாவிலும் வரவேற்பை பெற்று இருக்கிறது. ‘2.0’ படமும் மிகப்பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

தமிழ், இந்தியில் உருவாகி வரும் ‘2.0’ படத்தை மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளிலும், உலகில் அதிகமாக பேசப்படும் சீன மொழி உள்பட 15 மொழிகளில் 100க்கும் அதிகமாக நாடுகளில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றும் சொல்லப்படுகிறது. ஹாலிவுட் படத்துக்கு இணையான முதல் இந்திய படம் இது என்று சொல்லும் வகையில் ‘2.0’ தயாராகி வருகிறது. இந்திய திரை உலகம் இதுவரை கண்டிராத விதத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.  நக்கீரன்

கருத்துகள் இல்லை: