புதன், 7 ஜூன், 2017

பாஜக வுடன் Flurting சின்னய்யா அன்புமணி ராமதாஸ் ! ம பி 6 விவசாயிகள் கொலையை கண்டுக்கல்ல..

அறிக்கை விடுவதில் அப்பா ராமதாஸைப் போல மகன் அன்புமணியும் சளைப்பதில்லை. மராட்டியம், மத்தியப் பிரதேச விவசாயிகள் போராட்டத்தை ஒட்டி பாமக சின்னைய்யா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆறு விவசாயிகள் கொல்லப்பட்டதற்காக அதிர்ச்சி அடைகிறார். விவசாயிகள் விசயத்தில் மென்மை, பொறுமை கடைபிடிக்கப்படாததை கண்டிக்கிறார்.
பிறகு விவசாயிகளுக்கு ம.பி அரசு செய்த சலுகைகளை பாராட்டுகிறார். இறுதியாக போராடும் விவசாயிகள் கடனை ரத்து செய்வதற்கு காரணம் விவசாயம் இலாபமில்லை என்ற சங்கதியை கண்டு சொல்கிறார். போராட்டம் துப்பாக்கி சூடு வரை போகாமல் அரசு பேச்சு வார்த்தை நடத்தி உத்தரவாதம் அளித்திருக்கலாம் என்கிறார்.
ஆகவே துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாஜக அரசிற்கு கோரிக்கை விடுக்கிறார். பிறகு மராட்டியம் இதர மாநிலங்கள் வரை சென்று கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்கிறார்.
நண்பர்களே ஆறு விவசாயிகள் கொல்லப்பட்ட நிகழ்வில் மருந்துக்கும் கூட பாஜக மாநில அரசை கண்டிக்கவில்லை. மாறாக அரசை பாரட்டுகிறார். கண் துடைப்பிற்காக போலீசை கண்டிக்கிறார். போலீசு பொறுமையுடன் நடந்திருப்பதாக ம.பி முதல்வர் சவுகான் கூறியிருப்பது அன்புமணிக்கு கிடைத்திருக்கும் கரிக் குத்தா இல்லை மூக்கு வெட்டா தெரியவில்லை.
சென்ற பாராளுமன்ற தேர்தல் போன்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டு வைக்கும் வாய்ப்பிருப்பதால் எதற்கும் ஒரு துண்டு போட்டு வைப்போம் என அன்புமணி நினைக்கிறார். தில்லியில் விவசாயிகள் போராடியது, மராட்டியம், ம.பியில் போராடியது அனைத்தும் சேர்ந்தாலும் கூட அவரிடம் பாஜகவையோ மோடி அரசையோ ஏன் ம.பி சவுகான் அரசையோ கூட கண்டிக்க துப்பில்லை.
இவர்தான் அல்ட்ரா மாடர்ன் முதலமைச்சராக சென்ற சட்ட மன்றத் தேர்தலில் சீன் போட்டவர். அதென்னவோ கோட்டு சூட்டு போட்ட கனவான்கள் அனைவரும் இப்படித்தான் அதிகார மொழியில் பேசி அரசியல் செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை: