வியாழன், 8 ஜூன், 2017

இன்று இங்கிலாந்து தேர்தல் .. ஆளும் கன்சர்வேடிவ் அதிக பெரும்பான்மை ...?

All the news as the snap election gets under way, with last-minute polls still ... out the survey in the story is not part of the British Polling Council. இங்கிலாந்து பொதுத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!இங்கிலாந்து பிரதமருக்கான பொதுத்தேர்தல் ஜூன் 8, வியாழக்கிழமையன்று தொடங்கியது. இதில் பிரதமர் தெரசா மே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தொடர்வார் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுத்தேர்தலில் லட்சக்கணக்கான இங்கிலாந்து மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்த உள்ளனர். தற்போது ஆளும் பழமைவாத கட்சி இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கிறது.
கோம்ரெஸ் நடத்திய கருத்துக்கணிப்புகளில், ஆளும் கட்சி 74 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரதமர் தெரசா மேவின் கட்சி, எதிர்கட்சியைவிட 10 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளதாகவும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகியது. மொத்தம் 40,000 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மொத்தம் 46.9 மில்லியன் இங்கிலாந்து மக்கள் வாக்குச் செலுத்த பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் 650 எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தபால் மூலம் ஏற்கனவே சில வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுவிட்டன. தேர்தலின் இறுதி முடிவுகள் ஜூன் 9-ம் தேதி மதியம் வெளியிடப்படும். தேர்தலில் வெற்று பெற்று ஆட்சியை பிடிக்க 326 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும்.
தேர்தல் குறித்து பிரதமர் தெரசா மே பேசுகையில், “தேர்தல் நல்ல முறையில் நடைபெறும் என நம்புகிறேன். ப்ரெக்ஸிட்டுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்க இன்னும் 11 நாட்களே இருக்கின்றன. எனவே பேச்சுவார்த்தையில் பங்கேற்பது நானா இல்லை கார்பினா என்பதை மக்கள் தான் முடிவு செய்யவேண்டும்” என அவர் கூறினார்  மின்னப்மலம்

கருத்துகள் இல்லை: