பெண்களுக்கு
எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில் சமீப
காலங்களில் அதிக அளவில் சிறுமிகளும் பாதிக்கப்படுகின்றனர். நடிகை
பாவனாவுக்கு எதிராக நிகழ்ந்த பாலியல் வன்முறை சம்பவம் திரைத்துறையச்
சார்ந்தவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பின்
நடிகை சந்தியா, வரலட்சுமி ஆகியோர் தங்களுக்கும் இது போன்ற கொடுமைகள்
நடந்துள்ளது என்று பேச ஆரம்பித்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக நடிகை வரலட்சுமி ‘SAVE SAKTHI' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து மனுக்களை வாங்கி அதற்குரிய அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க இந்த அமைப்பு வழி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறைத்து நடிகை வரலட்சுமி கூறும் போது, “சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ல் ராஜ ரத்தினம் அரங்கில் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும் அதை தமிழக முதலமைச்சரிடம் கொண்டு செல்வோம். இது போன்ற முறையிலேயே ‘SAVE SAKTHI'அமைப்பின் பணிகள் அமையும்.’ என்றார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக