எடப்பாடி பழனிச்சாமி குறித்து கட்ஜூ கருத்து
சிறைக் கைதியின் தலையாட்டி பொம்மையாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதல்வராக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?’’ என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அன்பார்ந்த தமிழர்களே, சிறைக் கைதியாக இருப்பவரின் தலையாட்டி பொம்மை உங்கள் முதல்வராக இருக்கின்றாரே, நீங்கள் எதுவும் செய்ய மாட்டீர்களா? நீங்கள் வீழ்ந்தால் உங்களுடைய மூதாதையருக்கு அவமானம். இப்படி ஒரு முதல்வரை ஏற்றுக்கொண்டது உங்களுக்கு அவமானம் இல்லை? நானும் தமிழன் என்று கர்வமாக கூறி வந்தேனே. இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு இப்படி சொல்வேன்.
அவமரியாதை பற்றி கவலைப்படாத ஒரு சமூகத்தில் நானும் ஒருவனாக வாழ மறுக்கிறேன். இவ்வாறு நீதிபதி கட்ஜூ பதிவிட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி எதிரான அவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. nakkeeran
அவமரியாதை பற்றி கவலைப்படாத ஒரு சமூகத்தில் நானும் ஒருவனாக வாழ மறுக்கிறேன். இவ்வாறு நீதிபதி கட்ஜூ பதிவிட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி எதிரான அவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. nakkeeran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக