திங்கள், 27 பிப்ரவரி, 2017

அரசு அலுவலகங்களில், பாட நூல்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயர் நீக்கம்..

ஜெயா படத்திற்கு கரி பூசி தடை!
குற்றவாளிகள் நம்மை ஆள்வது நமக்கு அவமானம், கொள்ளையர்களை எதிர்த்து போராடாமல் இருப்பதும் குற்ற செயலுக்கு ஒப்பானது.  – மக்கள் அதிகாரம் காக்கையை குயில் என்றும், பித்தளையை தங்கம் என்றும், கொள்ளைக்காரியை புரட்சி தலைவி என்றும் சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது மறுத்தாவது பேசுவீர்களா? இல்லை கண்டுக்கொள்ளாமல் சென்று விடுவீர்களா? ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு, ஜெயாவின் படத்தை பிடித்துக் கொண்டே தர்மம் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே இறுதியில் வெல்லும் என்று இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடிக்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.
ஜெயா வழியில் ஆட்சி தொடரும் என்று கூறுகின்றனர் தற்போதைய அதிமுக ஆட்சியளார்கள். இது இந்த அளவில் மட்டும் நிற்கவில்லை. திருடர்களே ஆட்சி செய்ய முடியும், திருடர்களே அதிகாரத்திற்கு வரமுடியும், திருடர்களே உத்தமர்களாகவும், தேசப்பக்தர்களாகவும் காட்டிக்கொள்ளமுடியும். இந்த ஆபத்தை உணர்ந்து மக்களுக்கு சுரணையூட்டுவது நமது கடமை.
வெட்கமே இல்லாமல் இன்று மக்களின் வரி பணத்தில் ஜெயாவிற்கு பிறந்த நாள் விழா எடுக்கும் நிலையில், நாங்கள் அம்மாவின் பொன்னான ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என பேசி குற்றாவளிகளையே யோக்கியர்களாக காட்டுகின்றனர் அதிமுக-வினர். இதனை எந்த சட்டமும், நீதி மன்றமும் கண்டிக்க போவதுமில்லை. எந்த எதிர்க்கட்சிகளும் இதை தீவிரமாக எதிர்த்து போராடப் போவதுமில்லை. ஜெயாவின் படத்தை நாங்கள் சட்டமன்றத்தில் வைக்கபோவது உறுதி என்று சவால்விட்டு பேசுகிறார்கள் ஜெயாவின் அடிவருடிகள்.


பல நாடுகளில் சொத்துகளை குவித்து வைத்துள்ள அருமை சின்னம்மா இந்த நீதிமன்றத்தை விலைக்கு வாங்க எத்தனை நாட்கள் பிடிக்கும்
தமிழகத்தின் நெற்களஞ்சியம் டெல்டாவில் ஹட்ரோ கார்பன் எடுப்பதாக கூறி தமிழகத்தையே பாலைவனமாக்க துடிக்கும் பா.ஜ.க., மீத்தேன், ஷெல் கேஸ் என பல பெயர்களில் அழிக்க காத்திருக்கிறார்கள். தமிழகமோ, சசி குடும்பமா? பன்னீரா? தீபாவா? என ஊடகங்கள் நம்மை விவாதிக்க பேச வைக்கின்றனர்.
கொள்ளைக் கூட்டத்தின் தலைவியான ஜெயாவுடன்  இருந்து பல நாடுகளில் சொத்துகளை குவித்து வைத்துள்ள சசிகலா இந்த நீதிமன்றத்தை விலைக்கு வாங்க எத்தனை நாட்கள் பிடிக்கும்? இந்த திருட்டு கூட்டம் நாளை உத்தமர்  கூட்டமாக  தன்னைக் காட்டிக் கொள்ளும். இன்று ஜெயாவிற்கு மெரினாவில் கோயில் கட்டுவோம் என்று தமிழ்நாட்டு மக்களை இளித்தவாயர்களாக்கும் இவர்கள் நாளை சின்னாம்மாவிற்கு மெரினாவில் சிலையும் வைப்பார்கள். நாம் ஏமாளிகளாக, சுரணைற்றவர்களாக இருக்கும் வரைக்கும் இந்தக் கூத்துக்கள் ஆளத்தகுதியிழந்த  அரசு கட்டமைப்பில் நீடிக்கும்.
இந்த இழி நிலைக்கு எதிராக நாம் சுயமரியாதையுடன் போராட முன்வரவேண்டும்.
குற்றவாளிகள் நம்மை ஆள்வது நமக்கு அவமானம், கொள்ளையர்களை எதிர்த்து போராடாமல் இருப்பதும் குற்ற செயலுக்கு ஒப்பானது.
வாருங்கள் மெரினா நமக்கு வழி காட்டியுள்ளது.
கீழே அரசு அலுவலகங்களில் ஜெயா படத்திற்கு கரி பூசியும், குற்றவாளி என்று அடையாளம் காட்டியும் உள்ளது. படங்களை பெரிதாக காண அழுத்தவும்.
தோழர் கோபிநாத் வட்டார செயலர்,
மக்கள் அதிகாரம், பென்னாகரம்.
9943312467
***

நம் கையில் இருந்த திருவள்ளுவர் படத்தை வாங்கி அவர்களே தங்களுடைய பைகளிலும் புத்தகங்களிலும் இருந்த களவானி ஜெயாவின் படத்தின் மீது ஒட்டிக் கொண்டன
ச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை பாடநூல்களில் இருந்து அகற்றும் போராட்டத்தை திட்டமிட்டபடி 2017 பிப் 23-ம் தேதி வியாழன் அன்று காலை மதுரை ஒத்தக்கடை அரசினர் மேல்நிலைப்பள்ளி வாயிலில் மக்கள் அதிகாரம் சார்பாக‌ நடந்தது. அதிமுகவின் கட்சி பிரமுகர்கள் நாட்டை கொள்ளையடிப்பதற்காக பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்து கொடுத்த ஜெயாவை அவர்கள் அழைப்பதை போல “அம்மா” என்கின்ற வார்த்தைக்கு கடுகளவில் கூட மக்கள் மரியாதை செய்வதில்லை என்பதை பளிச்சென்று மக்களும் மாணவர்களும் நமக்கு புரிய வைத்தனர்.
நம் கையில் இருந்த திருவள்ளுவர் படத்தை வாங்கி அவர்களே தங்களுடைய பைகளிலும் புத்தகங்களிலும் இருந்த களவாணி ஜெயாவின் படத்தின் மீது ஒட்டிக் கொண்டனர். அவர்களுடையதை மட்டுமின்றி பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மற்ற மாணவர்களையும் அழைத்து திருவள்ளுவர் படத்தை ஒட்டி விட்டனர். மேலும் பல பெற்றோர்கள் என்னவென்று கேட்டறிந்து பின்னர் அவர்களாகவே வாங்கி தங்களுடைய குழந்தைகளின் பைகளிலும் பாட நூல்களிலும் ஒட்டிவிட்டனர். ஒரு பெண் குழந்தையின் அம்மாவோ நாம் கூறியதை கேட்டுவிட்டு, ஏற்கனவே வகுப்பறைக்குள் சென்று விட்ட தன் மகளை மீண்டும் உள் சென்று அழைத்து வந்து திருவள்ளுவர் படத்தை ஒட்டிவிட்டார். இதில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெற்றோர்கள் கூட மகிழ்ச்சியாக வாங்கி ஒட்டிக்கொண்டனர்.
ஒரு வருடத்திற்கு முன்பு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் கூட அம்மா ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று திரிந்து கொண்டிருந்த அடிமைகளின் முகத்தில் காறி உமிழ்வது போல் இருந்தது இந்த நிகழ்வு. மேலும் இதை பருண்மையாக மக்கள் மத்தியில் பிரச்சாரமாக கொண்டு சென்று, ஊரறிந்த குற்றவாளி ஜெயாவின் படங்கள் நாம் தேர்ந்தெடுத்த அரசு அலுவலகம், பாட நூல்களில் இருப்பதும், நாம் தேர்ந்தெடுத்த மந்திரிகள் அவரின் ஆசிப்படி நாங்கள் ஆட்சி நடத்துகிறோம் என்று பகிரங்கமாக கூறிகொண்டு ஒரு களவாணியின் படத்தை சட்டைப் பையில் ஊர் பார்க்க வைத்துக் கொண்டிருப்பது நமக்குத்தான் அவமானம் என்ற கருத்தை பரப்பு வேண்டும்.
மக்கள் அதிகாரம்
மதுரை

கருத்துகள் இல்லை: