மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஏடிஎம்-களில் சீரியல் நம்பர் இல்லாத ரூ.5௦௦ நோட்டுகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் புதிய 500 மற்றும் 2000 நோட்டுகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன.
புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. எழுத்துகள், பாதுகாப்பு அம்ச கோடுகள் ஒரே சீராக இல்லாமல் வெவ்வேறு மாதிரியாக காணப்படுகிறது. இதனால், தங்கள் கையில் இருப்பது உண்மையான நோட்டா அல்லது கள்ளப்பணமா என மக்களிடம் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி அவசரம் அவசரமாக அச்சடித்ததில் சில தவறுகள் நிகழ்ந்துவிட்டதாகக் கூறியது. இதையடுத்து, மக்கள் புதிய ரூ. 5௦௦ நோட்டுகளைப் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் ஏடிஎம்-களில் போலி ரூ.500 மற்றும் 2000 நோட்டுகள் வரத் தொடங்கின. தற்போது மத்தியப்பிரதேசத்தில் டாமோ நகரில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் நாராயணன் அகர்வால் என்பவர் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம்-இல் ரூ.1000 எடுத்துள்ளார். அப்போது இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. ஆனால் இந்த இரண்டு நோட்டுகளிலும் சீரியல் நம்பர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, இவருக்கு அடுத்ததாக நின்றுகொண்டிருந்த சஞ்சய்அசாதி என்பவருக்கும் சீரியல் நம்பர் இல்லாத நோட்டுகள் வந்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதனால் காவல்துறையினர் ஏடிஎம் மையத்தை பூட்டி சீல் வைத்துள்ளனர்.
மேலும் சீரியல் நம்பர் இல்லாத நோட்டுகளை மாற்றித் தரும்படி வங்கிகளில் கேட்டதற்கு அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, டாமோ நகரில் பெரும்பாலான ஏடிஎம்-களில் இதுபோது சீரியல் நம்பர் இல்லாத ரூபாய் நோட்டுகள் வருவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்று அம்மாவட்ட கண்காணிப்பாளர் திலக் சிங் கூறியுள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக