இதுக்கு மிஞ்சி இவனுக கொள்கையை எப்படி விளக்க முடியும்?
புதுச்சேரி: நாடு நலம் பெற தனி மனிதர்களும், அவர்கள் வாழும் மாநிலமும் தேவையான தியாகத்தை செய்துதான் ஆக வேண்டும் என பாஜக எம்.பி. இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இல.கணேசன் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நாடு வளம்பெற மக்கள் தனி மனிதர் என்ற எல்லையை விட்டு வெளியேறி தியாகம் செய்ய தயாராக வேண்டும். இது ஒரு மாநிலத்திற்கும் பொருத்தமானதாகும். மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டுவருகிறது என்றால், அந்த மாநிலத்திலோ அல்லது நாடு தழுவிய அளவிலோ எதிர்க்கட்சிகளாக இருப்பவர்கள் அந்த திட்டத்தை எதிர்க்கவேண்டும் என்பது கட்டாயமல்ல. எதிர்க்கட்சி என்றால் அரசின் எல்லா திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்பது விதியும் அல்ல. நல்ல திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தில் செயல்படுத்த முயற்சி செய்து வருகின்றது. ஆனால் இது போன்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தும்போது எதிர்க்கட்சிகள் மக்களிடம் தவறாக எடுத்து சொல்லி மக்கள் மனதை மாற்றி விடுகின்றனர். இதனால் மக்கள் தங்களுக்கு எந்த திட்டம் நல்லது என்று தெரியாமலேயே போராட்டத்தை நடத்துகின்றனர். மாலைமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக