trolljaya2.:
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள்....
'நரகத்தின் நுழைவாயில்களாவும்' மாறலாம் !
சோவியத் நாட்டின் துர்க்மெனிஸ்தானின் டெர்வீஜ் என்னும் கிராமத்தின்
நிலத்தடியில் மீத்தேன் உட்பட சில ஹைட்ரோ கார்பன் எரிவாயுக்கள் உள்ளதாக 1971
ம் ஆண்டு சோவியத் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஆழ்துளை இட்டு அவற்றை
எடுத்து பயன்படுத்த எண்ணித் துளையிட்டனர்.
துளையிட்டுக்கொண்டு இருந்த போது துளைக்கருவி உடைந்து போனதில் நிலத்தினுள்
இருந்து வெடித்து வெளியேறிய வாயுக்கள் 230 அடி அகலத்துக்கு ஒரு பெரிய
பள்ளத்தை நிலப்பரப்பில் உருவாக்கிவிட்டது.
சிறு அளவிலான துளை என்றால் அடைத்து விடலாம், மேற்கொண்டு விஷவாயுக்கள் வெளியேறாமல் தடுத்துவிடலாம்.
230 அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டால் அதில் இருந்து வெளியேறும் விஷ
வாயுவை எப்படி கட்டுப்படுத்துவது என்று கை, கால்களை பிசைந்து, மண்டையை
போட்டு குழப்பிக்கொண்ட அந்த விஞ்ஞானிகளில் ஒரு 'அறிவாளி ஐடியா மணி' ஒரு
ஐடியா கொடுத்தார்.;
நெருப்பு வைத்துவிட்டால், அந்த பள்ளத்தாக்கில்
இருந்து வெளியேறும் வாயுக்கள் எரிந்து தீர்ந்துவிடும் என்பதே அந்த ஐடியா
மணி கொடுத்த சூப்பர் ஐடியா.
நெருப்பும் வைத்து விட்டார்கள்....ஒரு ரெண்டு நாட்களில் வாயு தீர்ந்துவிடும் என்று நம்பினார்கள். ஒரு வாரம், ம்ஹூம், ஒரு மாதம் ம்ஹூம்...ஒரு வருடம் ம்ஹூம்....இன்றயை தேதி வரை 46 ஆண்டுகளாக நிற்காமல் எரிந்து கொண்டிருக்கிறது அந்த "மீத்தேன்" கிணறு.
இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு நிரந்தரமாக இடம் பெரிய வேண்டியதாகிவிட்டது.
அந்த...இன்னும் எரிந்து கொண்டிருக்கும் மீத்தேன் கிணற்றுக்கு சூட்டப்பட்ட பெயர் 'நரகத்தின் நுழைவாயில்'!
தமிழ்நாடும் நரகத்தின் நுழை வாயிலாக வேண்டுமா ??? முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக