திங்கள், 27 பிப்ரவரி, 2017

மீதேன் /ஹைட்ரோகார்பன் பற்றி கமல்ஹாசன் : இயற்கை வளத்தையும் வாழ்வாதாரத்தையும் குலைக்கும்!

நடிகர் கமல்ஹாசன்  ஜல்லிக்கட்டு, தமிழக அரசியலை அடுத்து தன்னுடைய கருத்தை , ஹைட்ரோகார்பன் என்ற மீத்தேன் பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார்.
தமிழகத்தின் பொன் விளையும் பூமியில் மீத்தேன் வாயுவை எடுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் இதனை எதிர்த்து விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் போராடி வருகின்றனர்.
இதுகுறித்து கமல் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘பூமியின் இயற்கை வளத்தையும் ஏழைகளின் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும் என்று கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனங்களின் வெற்றிக்கு பின்னால் இயற்கை அழிவு இருப்பதாகவும், ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் இதுபோன்ற திட்டம் தவறானது என்றும், தமிழக மக்கள் விழித்து கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார். மேலும் இன்றைய மாணவர்கள் விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கு அமைதியான வழியில் போராட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் மீத்தேன் திட்டத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்த புதுச்சேரி முதல்வருக்கு அவர் பாராட்டும் தெரிவித்தார்.  லைவ்டே

கருத்துகள் இல்லை: