வெள்ளி, 3 மார்ச், 2017

121 எம்.எல்.ஏக்களுக்கு தலா 4கிலோ தங்கம்!

பழனியில் நடந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்,"மூன்று கிலோ தங்கத்திற்கும் மூன்று கோடி ரூபாய்க்கும் ஆசைப்பட்டு மக்களின் நன்மதிப்பை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.கள் இழந்து விட்டார்கள்.இனி அவர்களால் கவுன்சிலராகக் கூட ஜெயிக்க முடியாது” என்று கூறியது, சாதாரணமானது அல்ல. இதன் பின்னணியை விசாரித்தோம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி ஆகியோர் வீடுகளில் வருமானவரித்துறை தேடுதல்வேட்டை நடத்தியபோது, அவர்களுக்கு நெருக்கமான ஒரு நகைக்கடையிலும் சோதனை நடத்தியது. அமைச்சர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரின் லஞ்சப்பணம் வைரங்களாக அந்த நகைக் கடையில் மாற்றப்படுகிறது என சர்ச்சைக்குள்ளான நகைக்கடை,வைர வியாபாரத்துக்குப் பேர்போன கீர்த்திலால் ஜுவல்லரி.அந்த நகைக் கடையிலிருந்து 500 கிலோ தங்கம் 121 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளது என வருமானவரித் துறை கண்டுபிடித்தது.


கீர்த்திலால் நகைக் கடையின் உரிமையாளரை விசாரணைக்கு அழைத்தது.ஏற்கனவே வருமானவரித்துறையின் வழக்குகளில் சிக்கியுள்ளதால் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

விசாரணையில், ” 22 கேரட் மதிப்புள்ள தங்கத்தின் இன்றைய மதிப்பு ஒரு கிராமுக்கு 2853 ரூபாய். ஒரு கிலோ 28 லட்சத்து 53,000 ரூபாய். மொத்தம் 500 கிலோ தங்கத்தை 142 கோடியே 65 லட்சத்துக்கு வாங்கினேன். அதை 121 எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்தார்கள்.
ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் 4.13 கிலோ வீதம் சராசரியாக கொடுத்தேன். அதன் மதிப்பு 1 கோடியே 18 லட்ச ரூபாய். அ.தி.மு.க. கட்சி அலுவலகம், அவர்கள் நடத்தும் திருமண விழாக்களுக்காக என்னிடம் தங்கம் வாங்கும் தமிழக அரசும் தாலிக்கு தங்கம் வழங்குவதற்கு என்னிடம் தங்கம் வாங்கும். அதனால் அ.தி.மு.க. கட்சி தலைமை கேட்டதால் தங்கம் கொடுத்தேன்.

அவர்கள் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் அவர்கள் குடும்பத்தில் மகள்கள் இருந்தால் கொஞ்சம் அதிகமாகவும், ஆண்பிள்ளைகள் இருந்தால் குறைவாகவும் கொடுத்தார்கள். இவற்றையெல்லாம் அந்தந்த எம்.எல்.ஏ.க் களின் வீடுகளுக்கே கொண்டு போய் கொடுத்தோம்.

இந்த தங்கத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பமும் 400 சவரன் நகை செய்து கொள்ளலாம். ஆனால் இதுவரை எனக்கு சேர வேண்டிய 142 கோடியே 65 லட்ச ரூபாயை அ.தி.மு.க. தலைமை தரவில்லை” என்று கூறியுள்ளார்.

வாக்குமூலத்தைப் பதிவுசெய்துவிட்டு,”இந்த 500 கிலோ தங்கத்திற்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பதை தெரிவிக்கவேண்டும்”எனும் நிபந்தனையுடன் அவரை வருமானவரித் துறை அனுப்பி வைத்துள்ளது .நக்கீரன் .com

கருத்துகள் இல்லை: