கோவை:சசிகலா படம் போட்ட காலண்டரை, அ.தி.மு.க.,வினர் பலர் திருப்பி கொடுத்ததால், சசிகலா ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அ.தி.மு.க.,வின் தற்காலிக பொது செயலராக, சசிகலா தேர்வு செய்யப்பட்ட பின், கோவையில் அக்கட்சி நிர்வாகிகள் பலர், ஜெ., மற்றும் சசிகலா படங்களுடன், தினசரி காலண்டரை ஆயிரக்கணக்கில் அச்சிட்டனர். இவற்றை, பகுதி, ஒன்றிய செயலர்கள் மூலம் பேரூராட்சி,ஊராட்சி, நகர, கிளை நிர்வாகிகளுக்கு வழங்க முடிவானது. ஆனால், சசிகலா படம் போட்ட காலண்டரை பெற்று கொள்ளவும், அதை வீட்டில் மாட்டி வைக்கவும், அ.தி.மு.க.,வினர் பலர் விரும்பவில்லை. இதனால், நுாற்றுக்கணக்கான காலண்டர்கள், அந்தந்த பகுதி செயலர்களின் வீடுகளில், குவிந்து கிடக்கின்றன.
அ.தி.மு.க.,வினர் கூறுகையில், 'அந்தந்த பகுதி நிர்வாகிகள், காலண்டர்களை ஆர்வமாக வாங்கிச் சென்றனர். வீட்டில் சென்று பண்டல்களை பிரித்த பலர், சசிகலா படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பலர், காலண்டர்களை உடனுக் குடன் பகுதி நிர்வாகியிடம் திருப்பி கொடுத்து விட்டனர்' என்றனர். தினமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக