புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தன்னை தமிழன் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வார்.
இந்த நிலையில் அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில், சசிகலாவின் தீவிர ஆதரவாளரான பழனிசாமி முதல்-மந்திரி ஆக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் எதையும் செய்யாதது குறித்து வருத்தம் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “நீங்கள் மாபெரும் சேர, சோழ, பாண்டியர்களின் சந்ததியினர். திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், ஆண்டாள், சுப்பிரமணிய பாரதி ஆகியோரின் பரம்பரையினர். ஆனால் எந்த எதிர்ப்பும் காட்டாமல், இதை (பழனிசாமி முதல்-அமைச்சர் ஆக்கப்பட்டதை) ஏற்றுக்கொண்டது வெட்கமாக இல்லையா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
அத்துடன், “நானும் ஒரு தமிழன் என்று பெருமையுடன் கூறி வந்துள்ளேன். ஆனால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு நான் இனி இப்படி சொல்வேன்? வெளிப்படையாகவே சொல்கிறேன். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருக்கிறவரை நான் தமிழனாக இருக்க மாட்டேன்” எனவும் கூறி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக