கவர்னர் வித்யாசாகர் ராவ் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு
வந்துவிட்டார். இன்று அப்பல்லோவுக்கு வந்த அவரை வாசலுக்கு வந்து
தம்பிதுரையும், ஓ.பன்னீர்செல்வமும் வரவேற்றார்கள். ஆனால் தம்பிதுரையிடமும்,
பன்னீரிடமும் கவர்னர் சின்ன சிரிப்பைக்கூட உதிர்க்காமல்தான் உள்ளே போனார்.
அவரை நேராக அப்பல்லோ சேர்மன் பிரதாப் ரெட்டி தன் அறைக்கு அழைத்துச்
சென்றார். அங்கேதான் முதல்வரின் உடல்நிலை குறித்து கவர்னருக்கு விளக்கம்
சொல்லப்பட்டு இருக்கிறது. ‘மேடம்க்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கும் டாக்டர்ஸ்
யாரு இருக்காங்க.. வரச் சொல்லுங்க! நான் பேசணும்’ என்று கவர்னர்
சொல்லியிருக்கிறார். அதன்பிறகு, இரண்டாவது தளத்தில் இருந்த டாக்டர்கள்
சிலர் ரெட்டியின் அறைக்கு வந்திருக்கிறார்கள். அந்த டாக்டர்களிடம், கவர்னர்
சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அதற்கு டாக்டர்களும் பதில்
சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகுதான் அமைச்சர்களைப் பார்த்திருக்கிறார்.
அப்போது தம்பிதுரையிடம், ‘நீங்க எல்லோரும் மேடம்க்கு நல்லா இருக்குன்னு
சொன்னதாலதான் நான் அவங்களை போன தடவை வந்தபோது பார்க்கலை. அவங்க உடல்நிலை
பற்றிய உண்மைகளை என்னிடம் ஏன் மறைக்க நினைக்கிறீங்க…’ என்று, சற்று
கடுமையாகவே கேட்டதாகச் சொல்கிறார்கள்.
அதற்கு தம்பிதுரை, ஏதேதோ விளக்கம் சொல்லியிருக்கிறார். ஆனால் கவர்னர் சமாதானமே ஆகவில்லை என்கிறார்கள். தம்பிதுரையும் பன்னீரும், மீண்டும் முதல்வரின் உடல்நிலை நலமாக இருப்பதாக கவர்னரிடம் பேச ஆரம்பித்துள்ளனர். ‘டாக்டர்ஸ் சொன்னாங்க.. நான் கேட்டுட்டேன். தேங்க்ஸ்’ என்று சொல்லிவிட்டாராம். கவர்னர் கோபமாகப் போன தகவல் உடனடியாக சசிகலா கவனத்துக்கு கொண்டுபோய்விட்டாராம் தம்பிதுரை. வழக்கம்போல, எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு பதில் எதுவும் சொல்லவில்லையாம் சசிகலா!”மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக