ஞாயிறு, 23 அக்டோபர், 2016

ஸ்டாலின் மருமகன் சபரீசன் மூலமாகதான் டாக்டர் சரவணன் வேட்பாளர் ஆனார் .. திருப்பரங்குன்றத்தில் வெளங்கிடும்.

தென்மண்டலப் பொறுப்பாளராக இருந்த மு.க.அழகிரி இப்போது திமுக-வில் இல்லை. தொடக்கத்தில் அனைவருமே ஐ.பெரியசாமியை அழகிரி ஆதரவாளர் என்றுதான் கூறி வந்தார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அழகிரியா, ஸ்டாலினா என்று வந்தபோது உறுதியாக ஸ்டாலின் பக்கம் நின்றதோடு தென் மாவட்ட திமுக-வை அழகிரியின் கைகளில் இருந்து காப்பாற்றி, ஸ்டாலின் கைகளில் பாதுகாப்பாக ஒப்படைத்தவர் ஐ.பெரியசாமிதான். அதன் பின்னர்தான் ஸ்டாலினிடம் பெரியசாமிக்கு செல்வாக்கு அதிகமானது. கடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களிலும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் வாரிசுகளுக்கு சீட் கிடையாது என்று திமுக அறிவித்த போதும்கூட, பெரியசாமிக்கும் அவரது மகன் ஐ.பி.செந்தில்குமாருக்கும் ஸ்டாலின் சீட் வழங்கினார். தற்போது ஐ.பெரியசாமி திமுக மாநில துணை பொதுச் செயலாளராகவும் எம்எல்ஏ-வாகவும் இருக்கிறார். அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் மாவட்டச் செயலாளராகவும் எம்எல்ஏ-வாகவும் இருக்கிறார். தற்போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் டாக்டர் சரவணன், ஐ.பெரியசாமி மூலமாகவே ஸ்டாலின் மருமகன் சபரீசன் மூலம் பேசினார்.
அவர் பரிந்துரைத்த டாக்டர் சரவணனையே திமுக வேட்பாளராகவும் ஆக்கியது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்போது ஐ.பெரியசாமியை திருப்பரங்குன்றம் வெற்றிக்காக களமிறக்கியுள்ளது திமுக. அழகிரிக்குப் பின்னர் தென் மண்டல திமுக-வில் செல்வாக்கோடு வலம்வரும் ஐ.பெரியசாமிக்குத் திருப்பரங்குன்றம் தொகுதியைச் சவாலாக வைத்துள்ளது திமுக. இந்தச் சவாலில் வெல்ல வேண்டும் என்று தீயாக வேலை செய்கிறார் பெரியசாமி!  மினம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: