
அழகிரியின் மனசாட்சி என சொல்லப்படும் முன்னாள் மண்டலத் தலைவர் இசக்கிமுத்து ‘கட்சிக்காக அழகிரி எவ்வளவோ தியாகம் செய்திருக்கிறார். அதைத் தலைமை கண்டுகொள்ளவே இல்லை. அண்ணனைக் கட்சியைவிட்டு நீக்கி மூன்று வருடங்களாகிவிட்டன. அப்படியிருந்தாலும், தலைவரை சாதியை சொல்லி இழிவாகப் பேசிய வைகோ கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்த தொண்டர்களை அனுப்பியவர் அழகிரி. கட்சிக்கு துரோகம் செய்தவர்களை, கட்சி உடைய காரணமானவர்களை, தலைவர் குடும்பத்தையே இழிவாகப் பேசியவர்களை அரவணைத்துக் கொண்ட தலைவர், அழகிரியை மட்டும் அரவணைத்து செல்வதில் என்ன தயக்கம்? அவரை தடுப்பது யார்?’ என சீரியஸாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார் இசக்கிமுத்து.’’
‘‘கருணாநிதி தற்போது உடல்நிலைக் குன்றி சிரமப்படுகிறார். அவரது இரண்டு கைகளில் உள்ள முட்டியிலும், முதுகிலும் கொப்பளங்கள் வந்துள்ளன. இதனால் உட்கார முடியாமல் படுத்தே உள்ளார். வயது காரணமாகவும், அவருக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களை அடிக்கடி மாற்றுவதாலும், சிகிச்சை முறைகளை மாற்றுவதாலும் அலர்ஜி வந்துள்ளது என்றும் கூறுகிறார்கள். ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி ஆகியோர் மட்டுமே கருணாநிதி இருக்கும் அறைக்கு சென்று பார்த்து வருகின்றனர். கட்சிக்காரர்கள் யாராலும் கருணாநிதியைப் பார்க்க முடியவில்லை. ராசாத்தி அம்மாளும், கனிமொழியும் தினமும் இரண்டுமுறை கோபாலபுரம் வந்து கருணாநிதியைப் பார்த்துக்கொள்கின்றனர். அறிவாலயம், சி.ஐ.டி காலனி என எங்கும் செல்லமுடியாமல் கருணாநிதி வீட்டிலே உள்ளாராம். அதனால் இப்போதைக்கு எந்த ரியாக்ஷனும் இல்லை.’’ விகடன்,காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக