புதன், 26 அக்டோபர், 2016

கடைசி விவசாயி .. மணிகண்டன் இயக்கத்தில் உருவாகிறது .. காக்கா முட்டை இயக்குனர்

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற
வித்யாசமான படங்களை யதார்த்தத்திற்கு அருகில் நின்று படம் பிடித்துக் காட்டிய இயக்குனர் மணிகண்டன் தற்போது ‘கடைசி விவசாயி’ என்னும் படத்தை எடுத்து வருகிறார். தலைப்பை கேட்கும்போதே இது விவசாயிகளின் கதை என்பதை நம்மால் உணர முடிகிறது. இதில் 70 வயது நிரம்பிய விவசாயிதான் படத்தின் நாயகனாம். கதைக்கேற்ற நடிகரை மணிகண்டன் தற்போது தேடி வருவதாக கூறப்படுகிறது. ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது காவிரி விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில், தண்ணீரால் பாதிக்கப்படும் தமிழக விவசாயிகளின் நிலையை இந்த படம் பிரதிபலித்து காட்டுவதோடு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகைகளை அள்ளி வழங்கும் மத்திய அரசு, நம் விவசாயிகளின் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இருப்பதை இந்த படம் வெளிச்சம்போட்டு காட்டும் என ஒருதரப்பு கூறுகிறது.


ஆனால் இது விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனை பற்றிய படம் அல்ல .விதை விதைக்கும் விவசாயி, தான் விளைவித்த பயிர்களை மயில், மான், யானை மற்றும் பறவைகளிடம் இருந்து காப்பாற்ற எப்படி போராடுகிறான் என்பதுதான் படத்தின் மையப்புள்ளி எனவும் , பறவைகள் வாழும் மரங்களை வெட்டி சேதப்படுத்தினால், மிருகங்கள் வாழும் காடுகளை அழித்தல் அவைகள் பயிர்களை சேதப்படுத்திவிடும், எனவே பறவைகளை நிம்மதியாக வாழவிடுங்கள்', காடுகளை அழிக்காதீர்கள் என்பதே கதையின் முக்கிய கருத்தாக மணிகண்டன் சொல்ல இருப்பதாகவும் சில தரப்பு கூறுகிறது.

இதில் எந்த கதைக்களமாக இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படத்திலும் நிச்சயம் இயக்குனர் மணிகண்டன் பூர்த்தி செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: