'நீதிபதி பணியிடங்களை நிரப்பாமல், அரசு நிர்வாகம் இழுத்தடிப்பு செய்து வருகிறது; பேசாமல், கோர்ட்டுகளை மூடிவிடலாமா' என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளில், காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பு வது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்வு கூறியதாவது:
நீதிபதிகள் நியமனம் குறித்து, சுப்ரீம் கோர்ட் டின் தலைமை நீதிபதி அடங்கிய, 'கொலீஜியம்' பல்வேறு பரிந்துரைகளை அளித்தும், அதை நிறைவேற்றாமல், அரசு நிர்வாகம் இழுத்தடிப்பு செய்து வருகிறது. நீதித்துறையை செயல்பட விடாமல் முடக்குவதை ஏற்க முடியாது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், ஒரு குமாரசாமி-ஒரு கூட்டல் கணக்கு
தெரியாத நீதிபதி வதந்தி வழக்கு நீதிபதி இவர்கள் எல்லாம் இருப்பதற்கு பதில்
நீதிமன்றத்தை மூடுவது தான் சிறந்தது
இன்றைய நிலையில்,நீதிபதிகள் இல்லாததால், பல்வேறு கோர்ட்டுகள் செயல்படவில்லை. அலகாபாத் ஐகோர்ட்டில், 165 பணியிடங்களில், 77 நீதிபதிகளே உள்ளனர். கர்நாடகாவில், ஒரு தளத்தில் உள்ள கோர்ட் அறைகள், நீதிபதிகள் இல்லாததால், பூட்டி கிடக்கின்றன. ஒரு கால கட்டத்தில்,நீதிபதிகளுக்கு அறைகள் இல்லாமல் இருந்தது.தற்போது,அறைகள் உள்ளன. ஆனால், நீதிபதிகள் இல்லை. இதற்கு பதில், கோர்ட் அறைகளை மூடிவிட்டு, நீதியை வெளியேற்றிவிடலாம். அரசு நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால், நீதித் துறை முடங்கி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீதிபதி பணியிடங்களை நிரப்புவதில்,அரசு நிர்வாகம் வேகமாக செயல்பட வேண்டும். இவ்வாறு சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
450 காலியிடங்கள் நாடு முழுவதும் உள்ள, 24 ஐகோர்ட்டுகளில், அனுமதிக்கப்பட்ட, 1,041 பணியிடங்களில், 450க்கும் மேற்பட்ட பணியிடங்கள், தற்போது காலியாக உள்ளன. நீதிபதிகள் - அட்டர்னி ஜெனரல் கடும் வாதம் நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கில், மத்திய அரசு சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி மற்றும் நீதிபதிகள் இடையே, கடும் வாதம் நடந்தது. ரோஹத்கி யின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், கடுமையாக எச்சரித்தனர். ''சுப்ரீம் கோர்ட் பரிந்துரைந்த, 88 நீதிபதிகளில், 35 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு விட்டனர்; மீதி இடங்களும், விரைவில் நிரப்பப்படும்,'' என, முகுல் ரோஹத்கி கூறினார்.
இதை ஏற்க மறுத்த, சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியதாவது: நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழிகாட்டு வழிமுறைகள், இறுதி செய்யப்படாததால் தான், நியமனம் தாமதப்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது. உங்களுடைய கால தாமதத் துக்கு, நீதித்துறை பாதிக்க வேண்டுமா? பொறுமையாக நடந்து கொள்வது, சரிபட்டு வரவில்லை.
இது தொடர்ந்தால், ஐந்து நீதிபதி கள் அமர்வை கூட்டி, உறுதியான, கடுமையான உத்தரவு பிறப்பிக்க நேரிடும்.இவ்வாறு நீதிபதி கள் கூறினர். நீதிபதிகள் நியமனம் தொடர்பாக எடுக்கப்படும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசுடன் ஆலோசித்து, நவ., 11ல் தெரிவிப்பதாக,முகுல்ரோஹத்கி தெரிவித்தார். - நமது நிருபர் - தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக