ஞாயிறு, 23 அக்டோபர், 2016

பாஜகவின் வருண் காந்தி விலைமாதர்களுடன் . புகைப்படத்தை வைத்து மிரட்டிய ஆயுதவியாபாரி .... ராணுவ ரகசியங்களை வழங்கினார்

பா.ஜ.,விலிருந்து மேனகா மகன் வருண்... ஆயுத ரகசியங்களை
வெளியிட்டதாக புகார் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரனும், பா.ஜ., - எம்.பி.,யுமான, வருண், சூழ்ச்சி வலையில் சிக்கியதாகவும், அது, வெளி யில் தெரியாமல் இருக்க, ராணுவ ஆயுதங்கள் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த ரகசியங் களை கசியச் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதனால், அவரை கைகழுவ, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ;உ.பி., மாநிலம் சுல்தான்பூர் தொகுதியிலிருந்து, பா.ஜ., சார்பில் போட்டியிட்டு, எம்.பி., ஆனவர், வருண்; இவர், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரன்; மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா வின் மகன்; முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஆலோசனைக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.


வருணுக்கு நெருக்கமான, அபிஷேக் வர்மா, ஆயுதங்கள் விற்கும் டீலராக உள்ளார். அபிஷேக் வர்மா, 2005ல், கடற்படை தொடர் பான ரகசியங்களை வெளியிட்டது குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.

அதுதொடர்பாக, அமெரிக்காவை சேர்ந்த, ஊழல் அம்பலப்படுத்தும் ஆர்வலர் எட்மாண்ட்ஸ் ஆலன், சி.பி.ஐ.,க்கு பல ஆவணங்களையும், 'சிடி'க்களில் புகைப்படங்களையும், பல ஆண்டு களாக அனுப்பி வைத்துள்ளார்.இந்நிலையில், விலைமாதர்களுடன், வருண் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் உள்ள, 'சிடி' மற்றும் கடிதத்தை, பிரதமர் அலுவலகத்துக்கு, எட்மாண்ட்ஸ் ஆலன், கடந்த மாதம் அனுப்பி வைத்திருந்தார்.

அந்த புகைப்படங்களை காட்டி, வருணிடம் ராணுவ ஆயுதங்கள் குறித்த ரகசியங்களை,
அபிஷேக் கறந்ததாக கடிதத்தில் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை, ஸ்வராஜ் அபியான் அமைப்பு தலைவர்கள் யோகேந்திர யாதவ், பிரஷாந்த் பூஷண் ஆகியோர், சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

கடிதத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களை கடுமை யாக மறுத்துள்ள வருண், ஸ்வராஜ் அபியான் தலைவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப் போவதாக எச்சரித்திருந்தார். அடுத்தாண்டு துவக்கத்தில், உ.பி.,யில் நடக்கும் சட்டசபைத் தேர்தலில், தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும்படி, வருண் நச்சரித்து வந்தார்.

இந்நிலையில், வருண் தொடர்பாக வெளியான, 'சிடி' பா.ஜ., வட்டாரத்தில் கடும் அதிர்ச்சி அலை களை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பா.ஜ.விலி ருந்து, வருண் கழற்றி விடப்படுவார் எனத் தகவல் கள் கூறுகின்றன.மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை களில், பா.ஜ., மேலிடம் எவ்விதத்திலும் குறுக் கிடாது என்றும்,பா.ஜ., வட்டாரங்கள் கூறுகின்றன.
சர்ச்சை நாயகன்

பா.ஜ., - எம்.பி., வருண், அந்த கட்சியில் எப்போ தும் சர்ச்சைகளை ஏற்படுத் கொண்டிருப்பதால், மூத்த தலைவர்களின் அதிருப்தியை சம்பாதித் தார்.உ.பி., மாநிலம், அலகாபாத்தில், ஜூனில், பா.ஜ., தேசிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தபோது, நகரின் சாலைகளில், வருணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி போஸ்டர் கள் ஒட்டப்பட்டன; இது, கட்சி தலை மைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

உ.பி., மாநிலத்தின் பல பகுதிகளில், தன் ஆதர வாளர்களை அழைத்து, வருண், தனிக் கூட்டம் நடத்தியது, பெரும்சலசலப்பை ஏற்படுத்தியது. வருணின் ஒழுங்கீனம் பற்றி, பிரதமர் நரேந்திர மோடி யிடம், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா புகார் கூறினார். வருணின் நடவடிக்கைகள் குறித்து, பா.ஜ.,வை சேர்ந்த மேலும் பல தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.>திரும்பியது 'பூமராங்'

கடந்த, 1978ல், மேனகா நடத்திய வாரப் பத்திரி கைக்கு வந்த பார்சலில், அதிர்ச்சி தரத்தக்க வகையில், புகைப்படங்கள் இருந்தன. அப்போதைய துணைப் பிரதமர், பாபு ஜெகஜீவன் ராமின் மகன் சுரேஷ் குமார், சுஷ்மா சவுத்ரி என்ற பெண்ணுடன் நெருக்கமாக இருந்தபோது எடுத்த படங்கள் அவை.

அந்த புகைப்படங்களை, துணிச்சலுடன் பத்திரிகையில் வெளியிட்டார் மேனகா. ஜெக ஜீவன் ராமுக்கு பின், அவர் வாரிசாக அரசிய லில் குதிக்க திட்டமிருந்த சுரேஷ் குமாரின் கனவு, அத்துடன் அஸ்தமித்து போனது.

'பூமராங்' எனப்படும் ஆயுதம், மீண்டும் எறிந்த வன் கைக்கே வந்து சேர்வதை போல், தற்போது, மேனகாவின் மகன் வருணுக்கு, சுரேஷ் குமாரின் நிலை ஏற்பட்டுள்ளது. வருண் மீதான குற்றச்சாட்டு இன்னும் நிரூபணமாகா விட்டாலும், அதிலிருந்து அவர் மீண்டு வருவது கடினம் என, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த கடிதத்தை எழுதியுள்ள, எட்மாண்ட்ஸ் ஆலனை, இதுவரை நான் சந்தித்ததே இல்லை; அவர் யார் என்றும் எனக்கு தெரியாது. என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் துளிகூட உண்மை இல்லை. பிரிட்டனில் கல்லுாரியில் படிக்கும்போது, அபிஷேக், எனக்கு அறிமுக மானார். அவரை சந்தித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன; அவர் தொழிலுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை.

வருண், பா.ஜ., - எம்.பி.,

- நமது சிறப்பு நிருபர் -தினமலர்.com

கருத்துகள் இல்லை: