அதன் தமிழாக்கம் கீழே:
"அன்பிற்கினிய
ஷோலே [அவரது அம்மா பெயர்], எவ்வாறு ஈரானிய ஆட்சியின் சட்டதிட்டங்களை
எதிர்கொள்வது எப்படி என்பதை இப்போது கற்றுக்கொண்டேன்.
நான்
எனது வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை அடைந்துவிட்டேன் என்று
நீயாகவே ஏன் எனக்கு தெரிவிக்கவில்லை என்பது எனக்கு வருத்தமளிக்கிறது.
எனக்கு இந்த விஷயம் தெரிய வேண்டுமென உனக்கு தோன்றவில்லையா? நீ சோகமாக
இருப்பது என்னை எவ்வளவு வெட்கமடைய செய்கிறது என்பது உனக்கு தெரியுமா?
உனக்கோ அல்லது தந்தையினது கரங்களையோ முத்தமிடுவதற்கு நீங்கள் ஏன் எனக்கு எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை?
19
வருடங்கள் வாழ்வதற்கு எனக்கு இந்த உலகம் அனுமதித்திருக்கிறது. அந்த
அச்சுறுத்தும் கொடிய இரவில் நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய
உடல் இந்த நகரத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் வீசப்பட்டு இருக்கலாம். அதன்பின்
சிறிது நாட்கள் கழித்து, காவல் துறையினர் எனது உடலை கண்டுபிடித்து, பிரேத
பரிசோதனை அதிகாரிகள் நான் எவ்வாறு பலாத்காரம் செய்யப்பட்டேன் என்பதை
விளக்கி இருப்பார்கள்.
ஆனால்,
அதன் பிறகு என்னை கற்பழித்தவனை கண்டுபிடிக்க முடியாமலேயே போயிருக்கும்.
ஏனென்றால் நம்மிடம் இல்லாத பலமும், பணமும் அவர்களிடம் உள்ளதே. அதன் பின்
சில ஆண்டுகள் இதை நினைத்து நீ அவமானத்தால் துன்பட்டி போயிருப்பாய். அடுத்த
சில ஆண்டுகள் கழித்து நீயும் இறந்து போயிருப்பாய்.
எப்படியோ,
இப்போது கதை மாறியுள்ளது. என் உடல் சாலையோரத்தில் வீசப்படவில்லை.
கொடுமையான ’ரே’ சிறையின் கல்லறையில், தனியாக எனக்கு இடம்
ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய தலைவிதிக்கு உள்ளானதற்கான புகார் செய்ய
வேண்டாம். இறப்பு வாழ்வின் முடிவு கிடையாது என்பது உங்களுக்கு நன்றாக
தெரியும்.
வெப்துனியா,காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக