கேதன் தேசாய்: நினைவிருக்கிறதா?
கேதன் தேசாய் என்பவரைப்பற்றி நினைவிருக்கிறதா? ஆண்டுகள் சில கடந்துவிட்ட காரணத்தால் மறந்திருக்கலாம்; வெகுமக்களின் மறதிதானே அரசியல்வாதிகளுக்கு முக்கிய முதலீடு.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்த ‘குபேரன்’ அவர்.
கிடைத்த வாய்ப்பை எவ்வளவு மோசமாகப் பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு வேகமாகப் பயன்படுத்தியவர் கேதன் தேசாய். மருத்துவக் கல்லூரி அங்கீகாரம்தான் அவருக்குப் பணம் காய்ச்சி மரமாக இருந்திருக்கிறது. அவரது பணம் கறக்கும் பாணியே அலாதியானது. மருத்துவத் துறையினர் ஒரு மருத்துவக் கல்லூரிக்கான கட்டடம், இதர வசதிகள் செய்த பிறகு, அதன் நிருவாகம், மருத்துவக் கவுன்சி லிடம் அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கும். அதன் பிறகு மருத்துவக் கவுன்சில், ஒரு குழுவை தொடர்புள்ள கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கும். அவர்களும் தீவிரமாக விசாரணை செய்துவிட்டு, அறிக்கை அனுப்புகிறோம் என்று கூறிவிட்டுச் சென்று விடுவார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு ‘உங்கள் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் தர முடியாது’ என்று கூறி பல்வேறு குறைபாடுகளை சுட்டிக் காண்பிப்பார்கள்.
பல கோடிகள் செலவு செய்து கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரியை எப்படியும் துவங்கவேண்டும் என்ற நெருக்கடியில் உள்ள மருத்துவக் கல்லூரி நிர்வாகம் கவுன்சிலிடம் “பேசும்!’’ அடுத்த நொடியே சுறுசுறுப்படையும் கேதன் தேசாய், தனது இடைத்தரகரை நிருவாகத்திடம் பேசுவதற்காக அனுப்புவார்; அவரும் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கக் கொடுக்க வேண்டிய தொகையைப் பேசி முடிப்பார். பிறகு இந்தப் பணம் கைமாறும்.
இவ்வாறு பேசியதன் மூலமாக ஒரு கல்லூரிக்கு தலா ரூ.30 கோடி வரை கையூட்டுப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதுதவிர, நாடெங்குமுள்ள 200 தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து தலா 5 இடங்களைப் பெற்று, அவற்றையும் நல்ல விலைக்கு விற்றிருக்கிறார். இதன்மூலம் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு ஊழல் பணத்தால் உப்பரிகை கட்டி வாழ்ந்தவர் இவர்.
கேதன் தேசாயின் ஊழல் சாம்ராஜ்யம் நாடெங்கும் பரவிக் கிடந்தது. இது அரசின் காதுகளுக்கும் எட்டிவிட, அவரை வளைத்துப் பிடிக்க சி.பி.அய். முடிவு செய்தது. இதற்காக தக்க சமயம் பார்த்து சி.பி.அய். காத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில், பஞ்சாப்பைச் சேர்ந்த கியான்சா கர் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்காக ரூ.2 கோடி பணத்தை அம்மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் ஜே.பி.சிங், கன்வால்ஜித் ஆகியோர் கேதன் தேசாயிடம் கொடுத்தனர். அப்போது, மறைந்திருந்த சி.பி.அய். அதிகாரிகள் கேதன் தேசாய், கையூட்டுக் கொடுத்த 2 மருத்துவர்கள், இந்திய மருத்துவக் கவுன்சிலின் செயலாளர் ஏ.ஆர்.என். சீதல்வாட் ஆகியோரைக் கைது செய்தனர்.
ஏற்கெனவே 2001 ஆம் ஆண்டில் 0.65 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருள்களைப் பெற்றது தொடர்பாக கேதன் தேசாய்மீது குற்றம் சாற்றப்பட்டு, அது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி சி.பி.அய்.க்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கையும் தாண்டித் தான் மருத்துவக் கவுன்சிலின் தலைவர் பதவிக்கு தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான இவர் 2005 ஆம் ஆண்டு முதல் குஜராத் பல்கலைக் கழகத்தின் நிருவாகக் குழு உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
இவரைப்பற்றி இன்னொரு முதன்மையான செய்தி - பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டுக்காக அப்போதைய பிரதமர் திரு.வி.பி.சிங் சமூகநீதிக் கண்ணோட்டத்துடன் மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை நிறைவேற்ற முயற்சி செய்து கொண்டிருந்தபோது, அதற்கு எதிராக மாணவர்களைத் தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தியவர் இவர். இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டால், தகுதியும், திறமையும் போய்விடும் என்று கூறிய கேதன் தேசாய் போன்றவர்களின் தகுதியும், திறமையும் இப்போது வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது.
இவர் மற்றும் இவரது உறவினர்களின் வீடுகளை சோதனை நடத்திய சிபிஅய் ஊழல் பணத்தைக் கொண்டு செல்ல கன்டெய்னர்களை பயன்படுத்தும் அளவிற்கு பணம் மூட்டை மூட்டையாக எடுக்கப்பட்டது, அதே போன்று தங்க நகைகள் அடங்கிய பெட்டிகளை தொழிற்சாலையில் அதிக கனமுள்ள பொருட்களை சரக்கு வாகனத்தில் ஏற்றும் இயந்திரத்தை கொண்டுவந்து கன்டய்னர்களில் ஏற்றிச்சென்றனர். ஆனால், அவர்மீதான வழக்கு என்னாயிற்று என்பது மில்லியன் டாலர் கேள்வி.
அதைவிட அதிர்ச்சிக்குரிய ஒரு செய்தி என்ன தெரியுமா?
இந்திய அளவில் மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்து கொள்ளையடித்த திறமையைப் ‘பாராட்டி’ சர்வதேச மருத்துவக் கழகத்திற்குத் தலைவராக மோடி அரசு பரிந்துரை செய்துள்ளது. ஊழலுக்குப் போனசு கொடுத்து ஊக்குவிப்பு (பதவி உயர்வோ!)அரங்கேறி இருக்கிறது.
சூத்திரன் கொலை செய்தால் சிரச்சேதம்; பார்ப்பான் கொலை செய்தால் சிகைச் சேதம் (முடி - அதாவது மொட்டை அடித்தால் போதும்!) அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது.
மோடி அரசின் ஊழலை ஒழிக்கும் இலட்சணத்தைப் பார்த்தீர்களா?
ஊழல் வழக்கில் சிக்கிச் சிறைக்குச் சென்ற எடியூரப்பாதானே கருநாடக மாநில பா.ஜ.க.வின் தலைவர்!
மோடி விரும்பும் ராமராஜ்ஜியம், இந்து ராஜ்ஜியம் எத்தகையது என்பது விளங்கிவிட்டதே!
Read more: http .viduthalai.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக