இடைத்தேர்தல் வேட்பாளர்
தேர்வு முறையால் தி.மு.க.,வில்...சலசலப்பு!:
வேட்பாளர்களை முடிவு செய்து விட்டு, கண்துடைப்புக்காக நேர்காணல் நடத்தியது ஏன் என, தி.மு.க.,வில் திடீர் கேள்வி கிளம்பி உள்ளது.
தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு, நவ., 19ல் தேர்தல் அறிவிக்கப் பட்டு உள்ளது. இதையடுத்து, வேட்பாளர் தேர்வில், தி.மு.க., இறங்கியது.
இதற்காக, கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, சென்னை அறிவாலயத்தில், நேற்று முன்தினம், நேர்காணலும் நடத்தப்பட்டது. தி.மு.க., பொருளா ளர் ஸ்டாலின்
தலைமை யில் நடந்த நேர் காணலில், கரூர், தஞ்சாவூர், மதுரை மாவட்ட, தி.மு.க.,வினர் பங்கேற்றனர். வழக்கம் போல, விருப்ப மனு அளித்தவர் களிடம் விபரங்கள் கேட்கப்பட்டன.
ஆனால்,நேர்காணலுக்கு முன்னரே, வேட்பாளர் களை, சென்னை, கோபாலபுரம் இல்லத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி தேர்வு செய்து விட்டார்
அதனடிப்படையில், வேட்பாளர்களும் அறிவிக் கப்பட்டனர். இது, விருப்ப மனு அளித்து, வாய்ப்பு கிடைக்காதவர்களை,அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. அலைந்தது தான் மிச்சம்
அலையடிக்குது அதிருப்தி தி.மு.க.,வினர் கூறியதாவது:அ.தி.மு.க.,வினர், விருப்ப மனு வாங்கவில்லை.அரவக்குறிச்சியி லும்,தஞ்சாவூரிலும், ஏற்கனவே போட்டியிட்டவர் களையே அறிவித்து விட்டனர். தி.மு.க., விலும், அப்படி தான் செய்துள்ளனர். அ.தி.மு.க.,வை போல, விருப்ப மனு வாங்காமல் செய்திருக்க லாம். அதை விடுத்து, விருப்ப மனு வாங்கவும், நேர்காணல் நடத்தவும் என,கட்சியி னரை சென்னைக்கு அலைய வைத்தது தான் மிச்சம்.
விருப்ப மனுக்கள் பெற்ற அன்றே, கருணாநிதி யுடன் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போதே வேட்பாளர்களை இறுதி செய்து விட்டனர். முடிவெடுத்து விட்டு, எதற்காக நேர்காணல் நடத்த வேண்டும்?இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக