திங்கள், 24 அக்டோபர், 2016

Nonstop கார்கோ மண்டல மேலாளர் கைது .. பலரிடம் பணம் பெற்று கொண்டு ஏமாற்றினார்


  சென்னை வடபழனியை தலைமையிடமாகக்கொண்ட பிரபல  ‘நான்
ஸ்டாப் கூரியர் அண்ட் கார்கோ’ நிறுவனத்தின் மண்டல மேலாளர் சையத் உமர் உசைன் 5 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டு கொலைமிரட்டல் விடுத்தாக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.   சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் ஜக்கரியா(46). தனியார் தொலைக்காட்சியில் வந்த விளம்பரத்தைப்பார்த்து ஏஜென்சி எடுப்பதற்காக 5 லட்ச ரூபாய் பணத்தை மேலாளர் சையத் உமர் உசைனிடம் கொடுத்துள்ளார். ஆனால், சொன்னபடி ஏஜென்சி தராததால் பணத்தை கேட்டுள்ளார். ஆனால், பணத்தை திருப்பிக்கொடுக்காத நான்ஸ்டாப் கூரியர் அண்ட் கார்கோ நிறுவனத்தின் எம்.டி.சையத் அன்வரும் அவரது உதவியாளர் மகாலிங்கமும் கொலைமிரட்டல் விடுத்திருக்கி றார்கள். இதனால், நொந்துபோன ஜக்கரியா முத்தயால்பேட்டை காவல்நி லையத்தின் அக்டோபர்-17 ந்தேதி புகார் கொடுத்தார்.


;இதனைத்தொடர்ந்து  வழக்குப்பதிவு செய்து, கடந்த அக்டோபர் 21-ந்தேதி வடபழனி சிவன்கோயில் தெருவிலுள்ள நான்ஸ்டாப் கூரியர் அண்ட் கார்கோ நிறுவனத்தின் மேலாளர் சையத் உமர் உசைனை கைது செய்தது குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலகுமரன் தலைமையிலான போலீஸ். மேலும், அவரிடம் விசாரணை நடத்தியதில் மேற்கு சைதாப்பேட்டை சாரதி நகர் முனுசாமி தெருவில் வசிக்கும் சையத் உமர் உசைனுக்கு  எம்.டி. சையத் அன்வருடன் சேர்ந்து இந்தியா முழுக்க பிரான்சிஸ் தருவதாக கோடிக்கணக்கில் பலரிடம்  பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது. இதனால், சையத் உமர் உசைன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  மேலும் ஏ-1 அக்யூஸ்ட் சைத் அன்வர்,  ஏ-3 அக்யூஸ்ட் மகாலிங்கத்தை கைது செய்ய தேடிவருகிறது போலீஸ

இந்நிலையில், தமிழகம் முழுக்க நான்ஸ்டாப் கூரியர் அண்ட் காரோகோ நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட இளைஞர்களும் பெண்களும் சென்னை பிராட்வே தியேட்டர் அருகிலுள்ள முத்தயால்பேட்டை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனுக்களை கொடுத்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவருகிறது.நக்கீரன்.இம்

கருத்துகள் இல்லை: