சனி, 29 அக்டோபர், 2016

சீன பொருட்களை புறக்கணிப்பதால்... இரு தரப்பு உறவு பாதிக்கும் என மிரட்டல்

புதுடில்லி:'எங்களுடைய பொருட்களை புறக் கணித்தால், இந்தியாவுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவு கடுமையாக பாதிக்கும்' என, சீனா மிரட்டல் விடுத்துள்ளது.
உற்பத்தி நாடான சீனா, தன்னுடைய பல்வேறு பொருட்களை மற்ற நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. அதன் ஏற்றுமதியில், தெற்காசியாவில் மிகப் பெரிய சந்தையாகவும், உலக அளவில் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில், ஒன்பதாவது இடத்திலும், இந்தியா உள்ளது. இன்றய பொருட்களை பிரித்துப் பார்த்தால்  .... சீன தயாரிப்பு 100 % முழுப்பொருட்களை மட்டுமே தவிர்க்கிறோமே தவிர பகுதி பொருட்களை அல்ல... நாம் உபயோகிக்கும் பல மின்னணு சாதனங்கள் உற்பத்தியை வேறு ஒரு நாடு தான் தயாரிக்கிறது என்றாலும், அதில் ஒரு பகுதியை சீன தயாரிக்கிறது... உதாரணம் BlackBerry உபயோகம் செய்கிற நாடு கனடாவை சேர்ந்த பொருள் என்றாலும், அதன் பேட்டரி சீனாவில் தான் தயாராகிறது....


பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதற்கு எதிராக, இந்தியா கடுமை யாக பிரசாரம் செய்து வருகிறது. ஆனால், பாகிஸ்தானுக்கு, சீனா ஆதரவு தெரிவித்து வருகிறது.

என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தில், இந்தியா உறுப்பினராக இணைவதற்கு, சீனா முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இந்த சம்பவங்கள், இந்தியா - சீனா இடையே யான உறவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீன பொருட்களை புறக் கணிக்கும் பிரசாரம், நம் நாட்டில் தீவிரமடைந்துள்ளது.

குறிப்பாக, 'சீன பட்டாசுகளை புறக்கணிப்போம்' என, பல்வேறு தனி நபர்கள், அமைப்பினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இணைய
தளம் மூலமாகவும் நடந்து வரும் இந்த பிரசாரத்தின் எதிரொலியாக, சீன தயாரிப்பு பட்டாசு விற்பனை, இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டது.

'சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும்' என, மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை. அதே நேரத்தில், முறையான அனுமதியில்லாமல், விலை மலிவான, மிகவும் ஆபத்தான சீன பட்டாசு புறக்கணிப்பு பிரசாரம், சீன அரசுக்கு கொந்தளிப்பைஏற்படுத்தி உள்ளது.

பட்டாசை தவிர, சீனாவில் இருந்து வரும், மலிவு விலை பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட வற்றுக்கு எதிராகவும் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது, சீன அரசை கலங்கடித்துள்ளது.

''சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் பிரசாரம், இந்தியாவில் முதலீடு செய்துள்ள சீன நிறுவனங் களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புறக் கணிப்பால், இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் உள்ளிட்ட இரு தரப்பு உறவுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்,'' என, இந்தியாவுக்கான சீன துாதரகத்தின் செய்தித் தொடர்பாளர், ஜி லியான் கூறியுள்ளார்.

'சீன பொருட்களுக்கு எதிராக, மவுனமாக, அதே நேரத்தில் மிகவும் வீரியத்துடன் நடந்து வரும் புரட்சி, சீனாவுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. அதனால் தான், இந்த மிரட்டலை விடுத் துள்ளது' என, மத்திய வர்த்தக அமைச்சக உயர திகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'இந்தியாவுக்கே பாதிப்பு'

சீன பொருட்கள் புறக்கணிப்பு பிரசாரம் குறித்து, இந்தியாவுக்கான சீன துாதரகத்தின் செய்தித் தொடர் பாளர் ஜி லியான் கூறியதாவது:

சீன பொருட்களுக்கான புறக்கணிப்பு, சீனாவுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள், வெளியேறுவது குறித்து ஆராயத் துவங்கியுள்ளன; இது, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை குறைத்து விடும்; இரு தரப்பு உறவிலும், தாக்கத்தை ஏற்படுத்தும்.

சீனாவின் ஏற்றுமதியில், இந்தியாவுக்கு செய் யப்படும் ஏற்றுமதி, வெறும், 2 சதவீதமே. புறக் கணிப்பால், சீனாவை விட,இந்தியாவுக்கு தான் மிகப் பெரிய பாதிப்பு. நீண்ட கால அடிப்படை யில்,இரு நாடுகளுக்கும் இடையேயான உறவி லும்,இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

பாதிப்பு ஏற்படுத்தாது'சீன பொருட்கள் புறக்கணிப்பு, இரு நாடுகளுக் கும் இடையேயான வர்த்தக உறவை பாதிக் காது' என,சீன அரசு பத்திரிகையான, 'குளோபல் டைம்ஸ்' கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக அறிவியலுக்கான சீன மையத்தின் பேரா சிரியரான, லியூ ஜியாஜு எழுதியுள்ள கட்டுரை யில் கூறியுள்ளதாவது: இந்த புறக்கணிப்பு பிரசாரத்தால், இரு நாடுகளுக்கும் இடையே யான வர்த்தக உறவு பாதிக்காது.சீனாவில் தயாரிக்கப்படும், பல்வேறு மின்னணு சாதனங் கள்,இந்தியாவில் வேகமாக விற்பனையா கின்றன.

தற்போது உள்ள சூழ்நிலை மிக விரைவில் சீராகிவிடும். அதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது.இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: