யார் சொல்லை கேட்பது :
குழப்பத்தில் விஜயகாந்த்மூன்று தொகுதி
இடைத்தேர்தலில், வேட்பாளர் களை நிறுத்துவதா, வேண்டாமா என்ற குழப்பத் தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தவித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க. போட்டி யிட்டது. அனைத்து இடங்களிலும் தோல்வி மட்டுமல்ல; டிபாசிட்டையும் பறிகொடுத்தது. தற்போது, மூன்று தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால்வேட்பாளர்களை நிறுத்த விஜயகாந்த் விரும்புகிறார். ஆனால், கட்சியினரோ, 'ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும்; போட்டியிட்டாலும் தோல்வி நிச்சயம்; மேலும் செலவழிக்கவும், எங்களிடம் பணம் இல்லை'
என்று கூறி விட்டனர். இதனால், என்ன செய்வது என, அரசியல்ஆலோசகர்கள் சிலரிடம், கருத்து கேட்டுள்ளார். அவர்கள், 'தேர்தலை புறக்கணித்தால், கட்சி இல்லாமல் போகும்; மக்கள் மறந்து விடுவர்' என, கூறியுள்ளனர். இதனால், கட்சியினர் கூறுவதை கேட்பதா; அரசியல் ஆலோசகர்கள் கூறுவதை கேட்பதா என்ற குழப்பத்தில், விஜயகாந்த் தவித்து வருவதாக, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக