வெள்ளி, 28 அக்டோபர், 2016

கோவா முன்னாள் முதல்வர் சசிகலா ககோத்கர் காலமானார்

பனாஜி: கோவா மாநில முன்னாள் முதல்வர் சசிகலா ககோத்கர் உடல் நலக்
குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 81.
கோவாவின் முதல் முதலமைச்சர் தயானந்த பண்டோத்கரின் மகள் சசிகலா ககோத்கர். தயானந்த பண்டோத்கர் 1973-ம் ஆண்டு மரணம் அடைந்தபிறகு சசிகலா ககோத்கர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1979 ஏப்ரல் மாதம் வரையில் முதல்வர் பதவியில் நீடித்தார். கோவா மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்ற அவர் 90-களில் கல்வியமைச்சராகவும் இருந்தார்.

ஆரம்பக் கல்வித் திட்டத்தில் ஆங்கிலம் பயன்படுத்துவதை தவிர்த்து மராத்தி மொழியை பிராந்திய மொழியாக கொண்டுவர காரணமாக இருந்தார். தற்போது ஆங்கில வழி பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதை எதிர்த்து போராடி வரும் பாரதிய பாஷா சுரக்ஷா மஞ்ச் அமைப்பின் தலைவராக இருந்தார்.
கடந்த சில தினங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் சசிகலா ககோத்கர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 81. அவரது மறைவுக்கு முதலமைச்சர் லட்சுமிகாந்த் பர்சேகர் மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  tamiloneindia,com

கருத்துகள் இல்லை: