Terming Tamil Nadu government’s actions “clumsy attacks on free speech,” Amnesty International India on Saturday said the State must immediately drop charges and release those arrested for allegedly spreading rumours about the health of Chief Minister Jayalalithaa.
வதந்தி கைதுகள்:கண்டிக்கிறது சர்வதேச மன்னிப்பு சப ஞாயிறு, 23 அக் ஜெயலலலிதாவின் உடல்நிலை தொடர்பாக வதந்தி பரப்பியதாக இதுவரை பலர் பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கைதுகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் வந்து கொண்டிருக்கிறது. முன்னாள் நீதிபதி கட்ஜூ, தேசிய மனித உரிமை ஆணையத்தலைவர் தத்து ஆகியோர் இதைக் கண்டித்த நிலையில், ‘ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்’ அமைப்பும் இந்த கைதுகளை கண்டித்துள்ளது. ‘தமிழக அரசின் நடவடிக்கைகள், பேச்சு சுதந்திரத்தின் மீதான மோசமான தாக்குதல்’ என சனிக்கிழமை அன்று சர்வதேச மன்னிப்பு சபையின் இந்தியக் கிளை தெரிவித்திருக்கிறது. மேலும், ‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து வதந்தி பரப்பிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் 22ஆம் தேதியிலிருந்து ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
வதந்திகள் பரப்பியதற்காக ஏறத்தாழ எட்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், 50 பேருக்கு எதிராக ‘பொது குற்றம்’, ‘கலவரம் தூண்டுதல்’ ஆகிய காரணங்களுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என மன்னிப்பு சபையின் அறிக்கை தெரிவிக்கிறது.மேலும், ‘மாநிலத்தில் சட்ட ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. அரசு எந்தவிதமான தகவலும் அளிக்காத நிலையில், முக்கியமான பிரச்னை ஒன்று குறித்து வதந்தி பரப்புவதற்காக மக்களை கைது செய்வது தீர்வு கிடையாது’ என்று சொல்கிறார் சர்வதேச மன்னிப்பு சபையின் இந்தியக் கிளையின் பிரச்சாரகர் மேக்பீஸ் சிட்லோ. ‘பேச்சு சுதந்திரத்தின் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கு பதிலாக, தமிழக அரசு முதலமைச்சரின் உடல்நலன் குறித்து முறையான, சரியான தகவல்கள் அளித்து தவறான வதந்திகள் தவிர்க்கலாம்’ என்றும் அவர் கூறியிருக்கிறார். minnambalam.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக