
முசாபர்நகரில் மத மோதலை உருவாக்கியதற்காகவே அவருக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது என்று குமுறுகின்றனர். என்ன சொல்லுகிறது அரசு? காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் பாஷா என்ற முகாமில் வசித்து வரும் அர்ஷத் முகமது கூறுகையில், 8 மாதங்கள் உருண்டோடிவிட்டன. இந்த மோதலுக்குக் காரணமான ஒருநபரை மத்திய அமைச்சராகுகிறீர்கள் என்றால் இந்த புதிய அரசாங்கம் எங்களுக்கு என்ன மாதிரியான செய்தியை சொல்ல விரும்புகிறது? என்று கேள்வி எழுப்புகிறார். துப்பாக்கி சகிதம் பாலியான் சகோதரர் இதற்கு மாறாக சஞ்சீவ் பாலியானின் சகோதரரோ உற்சாகத்தின் உச்சத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். பத்திரிகையாளர்கள் அவரை சந்திக்க சென்ற போது கைகளில் துப்பாக்கி ஏந்தியபடிதான் அவர் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தாராம். மோடியின் திடீர் முடிவு "நேற்று காலை 8.30 மணி இருக்கும்.. திடீரென நரேந்திர மோடி, சஞ்சீவ் பாலியானை அழைத்து குஜராத் பவனுக்கு வரச் சொன்னார். எங்களால் இதை நம்பவே முடியவில்லை.. மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறி வீட்டுக்கு வெளியே இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினார். அச்சத்தில் சிறுபான்மையினர் ஏற்னெவே வாழ்விடங்களைவிட்டு முகாம்களில் முடங்கிக் கிடக்கும் சிறுபான்மையினரின் அச்சத்தை அதிகப்படுத்தும் வகையில் சஞ்சீவ் பாலியானை அமைச்சராக்கியிருக்கின்றனர் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக