ராஜ்நாத் சிங்- உள்துறை
அருண் ஜெட்லி- வெளியுறவு
சுஷ்மா சுவராஜ் - ராணுவம்
வெங்கையா நாயுடு -ரெயில்வே
ரவிசங்கர் பிரசாத் - சட்டம், நீதி
நிதின் கட்காரி- நகர்ப்புற வளர்ச்சி
சுமித்ரா மகாஜன் - பாராளுமன்ற விவகாரம்
நாளை பதவி ஏற்கவுள்ள மோடியின் மந்திரிசபையில் இடம் பெறப்போகிறவர்கள் யார், யார் என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. நரேந்திர மோடி தலைமையிலான மந்திரிசபை நாளை (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறது. மோடியின் மந்திரிசபை, அளவில் சிறியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாரெல்லாம் இந்த மந்திரிசபையில் இடம் பெறக்கூடும் என்பது குறித்து யூகங்களின் அடிப்படையில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் தனது மந்திரிசபையை இறுதி செய்வதில் நரேந்திர மோடி நேற்று தீவிரமாக ஈடுபட்டார். பல்வேறு தலைவர்களுடன் நேற்று அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார். டெல்லியில் குஜராத் பவனில் தங்கியுள்ள மோடியை நேற்று அவரது நம்பிக்கைக்கு பாத்திரமான வலதுகரம் என்று கூறப்படும் மூத்த தலைவர் அமித் ஷா முதலில் சந்தித்துப் பேசினார். மந்திரிசபை உருவாக்கம்பற்றி இரு தலைவர்களும் விவாதித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
அதைத் தொடர்ந்து மோடியை கட்சியின் மூத்த தலைவர்கள் உமாபாரதி, வெங்கையா நாயுடு, இந்தியக்குடியரசு கட்சித்தலைவர் ராம்தாஸ் அத்வாலே ஆகியோரும் சந்தித்துப் பேசினர். மோடியுடன் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து அமித் ஷா, டெல்லி அசோகா ரோட்டில் உள்ள பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கின் இல்லத்துக்கு சென்றார்.
அங்கு அவர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ராஜ்நாத் சிங்கை மேனகாகாந்தி, உதித்ராஜ், விஜய் கோயல், ஐ.டி. சுவாமி ஆகியோரும் சந்தித்துப் பேசினர். மோடியுடன் நாளை பதவி ஏற்க உள்ள தலைவர்களும், அவர்களுக்கு வழங்கப்படலாம்
பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி சபாநாயகர் பதவியை ஏற்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. இப்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைப்பாளராக இருப்பார் என்றும், மோடிக்கு தனது வாரணாசி தொகுதியை விட்டுக்கொடுத்த முரளி மனோகர் ஜோஷி சபாநாயகர் பதவியை ஏற்பார் எனவும் தகவல்கள் கூறுகின்றன. maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக