ஞாயிறு, 25 மே, 2014

ஏர் இந்தியா லஞ்சம் !கனடா தொழில் அதிபருக்கு சிறை !

ஒட்டாவா: ஏர் இந்தியா அதிகாரி மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் பட்டேலுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கனடா நாட்டு நீதிமன்றம் அந்நாட்டு தொழில் அதிபர் நசிர் கரிகருக்கு சிறை தண்டனை விதித்துள்ளது. கனடாவைச் சேர்ந்த தொழில் அதிபர் நசிர் கரிகர். அவர் ஒட்டாவாவைச் சேர்ந்த பாதுகாப்பு நிறுவனமான க்ரிப்டோமெட்ரிக்ஸின் ஊழியர்களுடன் சேர்ந்து பல கோடி மதிப்புள்ள சாப்ட்வேர் கான்டிராக்டை பெற கடந்த 2007ம் ஆண்டு ஏர் இந்தியா பாதுகாப்பு திட்ட குழுவின் துணை தலைவருக்கு ரூ. 1 கோடியே 16 லட்சத்து 86 ஆயிரத்து 200ம், அப்போதைய விமான போக்குவரத்து துறை அமைச்சரான பிரபுல் பட்டேலுக்கு 1 கோடியே 46 லட்சத்து 7 ஆயிரத்து 750ம் லஞ்சமாக கொடுத்துள்ளார் என்று புகார் எழுந்தது. இந்த கான்ட்ராக்ட் அந்த நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் ஒப்பந்தம் பெற லஞ்சம் கொடுத்ததாக கரிகர் மீது கனடா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கனடாவின் வெளிநாட்டு ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் 67 வயதாகும் கரிகருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் முதல் நபர் கரிகர் தான். இதற்கு முன்பு இந்த சட்டத்தின் கீழ் நிறுவனங்களுக்கு தான் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நசிர் லஞ்சம் கொடுத்தற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. இந்நிலையில் கரிகருக்கு தண்டனை காலம் 14 ஆண்டுகளாக உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: