திங்கள், 26 மே, 2014

மோடியின் நோ 75 ப்ளஸ்' ரூல் அத்வானியையும் ஜோஷியையும் கழற்றி விட கண்டுபிடிக்கப்பட்ட ரூல்ஸ் ?

டெல்லி: 75 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்று மோடி அரசு அறிவித்துள்ளது. மோடியின் அமைச்சரவையில் 75 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாஜ்பாய் அரசில் மனிதவளத் துறை அமைச்சராக இருந்த 80 வயதாகும் பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு மோடி அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை. அத்வானிக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் செய்த மோடியின் 'நோ 75 ப்ளஸ்' ரூல் மேலும் உள்துறை அமைச்சர், துணை பிரதமர் ஆகிய பதவிகளை வகித்த 86 வயதாகும் எல்.கே. அத்வானிக்கும் மோடி அமைச்சரவையில் இடம் இல்லை. மோடியின் அமைச்சர்களில் நஜ்மா ஹெப்துல்லா(74), கல்ராஜ் மிஸ்ரா(73) ஆகியோரைத் தவிர மீதமுள்ள அனைவரும் 70 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 75 வயதுக்கு மேற்பட்ட பாஜக தலைவர்கள் யாரும் அமைச்சர் பதவியை எதிர்பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: