நம்முடைய இராணுவ வீரனின் தலையை பாகிஸ்தான்காரன் அறுத்துக் கொண்டு போகிறான்,
நீ அவனுக்கு சிக்கன் பிரியாணி போடுகிறாயா?” என்று தேர்தல் பிரச்சாரத்தின்
போது மன்மோகன் சிங்கை வறுத்து எடுத்தார் மோடி. “தலையறுபட்ட கோழி மாதிரி
மேடைக்கு மேடை துள்ளினார்” என்றும் சொல்லலாம்.மோடியின் மேற்படி சிக்கன் பிரியாணி உரையை வீடியோ கான்பரன்சிங் மூலம்
கேட்கும் பாக்கியம் பெற்ற அமெரிக்காவில் குடியேறிய இந்து தேசபக்தர்களுக்கே
பி.பி எகிறி விட்டது எனும் போது, சாமானிய இந்தியர்களைப் பற்றி சொல்லத்
தேவையில்லை. மோடிக்கு தனிப்பெரும்பான்மை வழங்கி விட்டார்கள்.
இப்படி வரலாறு காணாத தனிப்பெரும்பான்மை பெற்ற ராஜாதிராஜ, ராஜ கம்பீர, ராஜகுல திலக சக்ரவர்த்தி மோடிக்கு தனது பட்டாபிஷேக வைபவத்தில் 64 தேசத்து ராஜாக்களும் பங்கேற்க வேண்டும் என்று ஒரு அல்ப ஆசை. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை வரவழைக்க அவர் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தபோது, நிதின் கட்காரி குறுக்கே புகுந்து கட்டையைக் கொடுத்தார்.“வாடா, வந்து பார்றா, அண்ணன் வண்டு முருகன், 7, ரேஸ் கோர்ஸ் ரோடு, டில்லி” என்று ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியில் பாகிஸ்தானுக்கு சவால் விட்டார்.
உடனே “நவாஸ் செரிப் இந்தியாவுக்கு போகக் கூடாது” என்று கொடி பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளில் ஒரு குரூப். “நாங்க பேசுனதெல்லாம் ச்ச்சும்மா.. ச்ச்சும்மா.. ” என்று அவிய்ங்களுக்குப் புரியவைத்து, ஷெரிப் பாயை சரிக்கட்டி ஒத்த்த்துக்க வைப்பதற்குள் “முடியல” என்ற நிலைக்கு ஆளாகி விட்டார் மோடி..
பெருமூச்சு விட்டு நிமிரக்கூட இல்லை. அடுத்தது கிளம்பி விட்டது சிக்கன் பிரியாணி பிரச்சினை.
கொல்லப்பட்ட இந்திய சிப்பாய் ஹேம்ராஜ் சிங்கின் மனைவி தர்மவதி உண்ணாவிரதம் இருக்கிறாராம்! “மோடியோட சிக்கன் பிரியாணி பேச்சை நம்பி அவருக்கு நான் தேர்தல் வேலை பார்த்தேன். அந்தாளு எப்டி நவாஸ் செரிபுக்கு விருந்து வைக்கலாம்?” “ஜெனரல் வி.கே.சிங் பாகிஸ்தானை பழி வாங்குவோம்னு அன்னக்கி சொன்னாரே, இன்னும் ஏன் வாங்கலை?” என்று கேட்கிறார்.
“அந்தாளு டிபன்ஸ் மினிஸ்டர் போஸ்டை வாங்குறதுக்காக வாய்க்கு வந்ததை பேசினா, அதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியுமாய்யா? பஞ்ச் டயலாக் பேசுறதுக்கு, ஒரு டி. ராஜேந்தருக்கு உள்ள உரிமை கூட எனக்கு கிடையாதாய்யா?” என்று குமுறுகிறார் மோடி.
“நவாஸ் ஷெரீபும் வரணும், சொன்ன வார்த்தையையும் காப்பாத்தணும். அதுக்கு என்னா செய்யிறது?” என்ற மோடியின் கேள்விக்கு, தலைமை ஆலோசகர் அமித் ஷா, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் படை, ஐ.டி. டீம் உள்ளிட்ட சங்கத்தில் உள்ள எல்லா புலவர்களும் விடிய விடிய யோசித்தும் யாரிடமும் பதில் இல்லை.
“சிக்கன் பிரியாணி கேன்சே..ல்” என்று மண்டபத்திலிருந்து ஒலித்த சமையல்காரரின் குரல்தான் கடைசியில் மோடியின் கேள்விக்கு விடை சொல்லி, மன்னரின் கவுரவத்தை காப்பாற்றியிருக்கிறது. இந்த மேட்டர்கூட, பர்ஸ்ட் போஸ்ட் செய்தியை படித்த பின்னர்தான் நமக்குத் தெரிய வந்தது.
ஷெரீபுக்கு தரப்படும் விருந்தில், காடை, கவுதாரி, மீன், மட்டன் மட்டுமல்ல மாட்டுக்கறி கூட பரிமாறப்படலாம். ஆனால் “சிக்கன் பிரியாணி பரிமாறினார் மோடி” என்ற பழிச்சொல்லுக்கு மட்டும் எந்தக் கொம்பனாலும் மோடியை ஆளாக்க முடியாது. அப்படி குற்றம் சாட்டினாலும் அதனை நிரூபிக்க முடியாது.
குஜராத் படுகொலையை மோடி நடத்தவில்லை.
இஷ்ரத் ஜகான் கொலையில் மோடிக்கு தொடர்பில்லை.
ஹரேன் பாண்டியாவை மோடியோ அவரது ஆட்களோ போடவில்லை.
நவாஸ் ஷெரிபுக்கு மோடி சிக்கன் பிரியாணியும் போடவில்லை.
இல்லை, இல்லை. இல்லவே இல்லை.
போலோ பாரேத் மாத்தா கீ …. ஜெய்ய்ய்! vinavu.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக