ஞாயிறு, 25 மே, 2014

மோடி அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு நான்கு அமைச்சு ! பாமகவுக்கு இல்லை !

டெல்லி: திவாகர் ரெட்டி, அசோக் கஜபதி ராஜு, தோட்டா நரசிம்மம், ராயபதி சாம்பசிவ ராவ்- இவர்கள்தான் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் மோடி அமைச்சரவையில் இடம் பெறப் போகும் நால்வர் என்று தகவல்கள் கூறுகின்றன. தெலுங்கு தேசம் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் மொத்தம் 22 எம்.பிக்கள் உள்ளனர். அதில் ராஜ்யசபாவில் 6 பேரும், லோக்சபாவில் 16 பேரும் உள்ளனர். இதில் 12 பேர் புதிதாக லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.  லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுமுகங்கள் 12 பேரில் திவாகர் ரெட்டி, அசோக் கஜபதி ராஜு, தோட்டா நரசிம்மம் ஆகியோர் சட்டசபையில் நீண்ட காலம் எம்.எல்.ஏக்களாக, அமைச்சர்களாக இருந்தவர்கள். சீனியர்களான இவர்கள் மூன்று பேருக்கும் நிச்சயம் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தெரிகிறது. இவர்களில் ரெட்டியும், நரசிம்மமும், தேர்தலையொட்டிதான் தெலுங்கு தேசத்திற்கு வந்தனர். ராஜு, 6 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் ஆவார். ராஜுவுக்கு கேபினட் அமைச்சர் பதவி தரப்படும் என்று தெரிகிறது. ராயபதி சாம்பசிவ ராவ், 5 முறை எம்.பியாக இருந்தவர். காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவரான இவருக்கு காங்கிரஸ் கட்சி ஒருமுறை கூட மத்திய அமைச்சர் பதவி தரவில்லை. தற்போது நாயுடு கட்சியில் இணைந்துள்ள அவர் மத்திய அமைச்சராவது உறுதி என்கிறார்கள். அதேசமயம் நாயுடு எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்று ராவ் கூறியுள்ளார். மேலும் சித்தூர் எம்.பி. சிவ பிரசாத்தும் அமைச்சர் பெயர் லிஸ்ட்டில் அடிபடுகிறார். இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் நாயுடு அமைச்சரவையில் முன்பு அமைச்சராக இருந்தவர் ஆவார். தற்போதைக்கு இந்த 5 பேர் பெயர்கள்தான் நான்கு அமைச்சர் பதவிகளுக்கு அடிபடுகிறது. இதில் அதிர்ஷ்டம் யாருக்கு என்பது தெரியவில்லை.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: