தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை, கட்சியில் தக்க வைக்கும்
கடைசி கட்ட முயற்சியில், விஜயகாந்த் இறங்கியுள்ளார். இதற்காக, பிரதமர்
நரேந்திர மோடி உள்ளிட்ட, பா.ஜ., மேலிட தலைவர்களை சந்திப்பதற்காக, மூன்றாம்
நாளாக அவர் டில்லியில் காத்திருக்கிறார்.<லோக்சபா
தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கு, தி.மு.க., - -காங்கிரஸ் கட்சிகளிடம்
இருந்து மிகப்பெரிய வரவேற்பு இருந்தும், பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க.,
இணைந்தது. பா.ஜ., கூட்டணி, அ.தி.மு.க.,- - தி.மு.க.,விற்கு மாற்றாக
தமிழகத்தில் உருவானது.இக்கூட்டணிக்கு, தமிழக மக்களிடம் ஆதரவு கிடைக்கும்
என, நம்பியே, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இந்த கூட்டணியின்
வெற்றிக்காக, தமிழகம் முழுவதும் பிரசாரத்துக்காக சுற்றி வந்தார். தன் கட்சி
சார்பிலும், 14 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி, தீவிர பிரசாரம்
செய்தார்.ஆனால், தே.மு.தி.க.,விற்கு ஒரு இடத்திலும் வெற்றி கிடைக்கவில்லை.
தே.மு.தி.க.,வின், 10 வேட்பாளர்கள் 'டிபாசிட்' இழந்தனர்.இதனால், கட்சியினர்
மத்தி யில் பெரும் சோகம் நிலவுகிறது.தங்கள் எதிர்காலத்தை நினைத்து,
குழப்பத்துடன் உள்ளனர்.ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், விஜயகாந்த்
அமைதி காத்து வருகிறார். தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்வதற்கு, இதுவரை
கட்சி நிர்வாகிகள் கூட்டத்தையும் அவர் கூட்டவில்லை. கட்சி வேகமாக கரைவதால் அதற்கிடையில் ஏதாவது பண்ணியாகணும், கட்சியைநல்ல விலைக்கு விற்கவும் தயார் ?
குறைந்தபட்சம், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்களை தொடர்பு கொண்டும் பேசவில்லை. 'தே.மு.தி.க., இனி தேறாது' என, கருதும் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட சிலர், வேறு கட்சிகளுக்கு தாவ காய் நகர்த்த துவங்கியுள்ளனர். அ.தி.மு.க.,- - தி.மு.க., தரப்பில், இது தொடர்பாக ரகசிய பேரங்கள் நடந்து வருகின்றன.மாற்று கட்சிகளுக்கு செல்லும் நிர்வாகிகள், கட்சியின் தொண்டர்களையும் அதிகளவில் அழைத்து செல்வதற்கு வாய்ப்புள்ளது.இதை எப்படியாவது தடுத்து, கட்சியை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விஜயகாந்த், அதற்கான முயற்சியாகத்தான் டில்லியில் முகாமிட்டிருக்கிறார்.கடந்த 26ம் தேதி, மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக, பிரேமலதா, சுதீஷ் ஆகியோருடன் டில்லி சென்ற அவர், அங்குள்ள ஓட்டலில் தங்கியிருக்கிறார். பிரதமர் மோடியையும், பா.ஜ., மேலிட தலைவர்களையும் சந்தித்து, மைத்துனர் அல்லது மனைவிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வாங்கினால் தான், நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியில் தங்குவர் என, முடிவெடுத்து, அதற்காக தீவிரமான முயற்சியில் இருக்கிறார். இதற்காக, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு, மூன்று நாட்களாக டில்லியில் காத்திருக்கிறார் விஜயகாந்த்.பிரதமருக்கு இருக்கும் பல்வேறு பணிகளுக்கிடையில், விஜயகாந்தை சந்திக்க நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. இருந்தாலும், பிரதமர் சந்திப்புக்கு பின்தான், விஜயகாந்த் தமிழகம் திரும்புவார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக, தே.மு.தி.க., வட்டாரங்களில் கூறியதாவது:கட்சியை காப்பாற்றியாக வேண்டிய நெருக்கடியில்தான், அவர் பிரதமரை சந்தித்து, பதவி கேட்க முயற்சிக்கிறார். அதே நேரம், பிரதமரை சந்திக்கும் போது, அவர், இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை உள்ளிட்ட தமிழர், தமிழகம் சார்ந்து பல்வேறு விதமான மக்கள் பிரச்னைகளையும் தீர்க்க மனு கொடுப்பார். இதற்காகத்தான், அவர் டில்லியில் தொடர்ந்து தங்கியிருக்கிறார்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
-- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

பதவி கேட்க...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக