செவ்வாய், 27 மே, 2014

சுதீசுக்கு அல்லது பிரேமாவுக்கு ஏதாவது பார்த்து போட்டு குடுங்க சாமி ? விஜயகாந்த் குடும்பத்தோட டெல்லியில் காவடி !

மைத்துனருக்கு பதவி கிடைக்காத பட்சத்தில், மனைவிக்காவது பதவியை
பெற்று, கட்சியை காப்பாற்றும் நோக்குடன் விஜயகாந்த் டில்லி சென்றுள்ளார். மூன்று நாட்கள்? வரை அங்கு தங்கியிருந்து, காரியம் சாதித்து முடித்து சென்னை திரும்ப, அவர் திட்டமிட்டு உள்ளார்.
தமிழக அரசியலில், அ.தி.மு.க.,- - தி.மு.க.,விற்கு மாற்று சக்தி என்று கூறி வந்த தே.மு.தி.க.,வின் நிலைமை, லோக்சபா தேர்தல் முடிவுக்குப் பின் மோசமடைந்துள்ளது. லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், 14 தொகுதிகளில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்துள்ளதன் மூலம், தே.மு.தி.க.,வின் தமிழக ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் கனவும் தவிடுபொடி ஆகியுள்ளது. தமிழகத்தில், கட்சி கடுமையாக தோல்வி அடைந்துள்ளதால், முக்கிய எதிரியான அ.தி.மு.க.,வின் நெருக்கடி, அடுத்த சில மாதங்களில் அதிகரிக்கும் என, தே.மு.தி.க., தரப்பில் அஞ்ச ஆரம்பித்திருக்கின்றனர்.  துணை பிரதமர் என்கிற பதவிக்கு இதுவரை மோடி அவர்கள் ஏதும் சொல்லவில்லை. அதற்குக் ஏற்ற ஒரே தமிழக பிரதி பிரேமலதாதான்..எவ்வளவு ஆசை பாருங்கள்..தனது குடும்பம்..தனது மச்சான்..தன்மனைவி..அடேங்கப்பா..அப்போ கைகாசு போட்டு கடன்காரனாகி தெருவில் நிறுத்திய கட்சிக்காரர்களுக்கு..? இருட்டுக்கடை அல்வாதானா? இவருக்கு தேர்தலில் கொடுத்த விலையே மிக அதிகம்..அப்படி இருக்க பதவி கொடுப்பார் என்று வி காந்து எதிர்பார்ப்பது..பலவீனமே. கட்சியை கலைத்துவிட்டு பா ஜ கவில் சங்கமமாவதே சிறந்த வழி. நிச்சயம் அப்போது எதிர்பார்க்கலாம்..ஆனாலும் சுதீஷோ..பிரேமாவோ..எந்த பதவி வகித்தாலும் தமிழகத்தில் எடுபடாது..கோமாளியாகத்தான் மதிப்பார்கள்..டெல்லியில் இருந்துகொண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு சென்றமுறை 11 தொகுதிகளில் 2500 ஓட்டுக்களை மொத்தமாக பெற்றதை விட இந்த முறை அணைத்து தொகுதிகளுக்கும் சேர்த்து சுமார் 3000 ஓட்டுக்களை பெற்றாரே என்றால்..கட்சியை கலைக்கவே வேண்டாம்..மோடிக்கும் சற்றே பயமிருக்கும்..குழப்பத்தில்..நிதானமில்லாதவர்..
இதனால், கட்சி இனி தேறாது என்கிற மனநிலை, அக்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், கட்சியின் மாநில நிர்வாகிகள் முதல், தொண்டர்கள் வரை குழம்பிப் போய் உள்ளனர். எனவே, தே.மு.தி.க.,வை, பா.ஜ.,வில் இணைப்பதே சிறந்த முடிவாக இருக்கும் என, அவர்கள் கூறி வருகின்றனர். இதை நன்கு உணர்ந்திருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாத, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கட்சியை எப்படி கரை சேர்ப்பது என்ற கவலையில் உள்ளார். கூட்டணியில் இருந்தாலும், தே.மு.தி.க.,விற்கு என, டில்லியில் பிரதிநிதி இருந்தால், கட்சியை அடுத்த இரண்டாண்டுகளுக்கு பிரச்னையில்லாமல் கொண்டு சென்றுவிடலாம் என கணக்குப் போட்டு, அதற்கேற்ப டில்லியில் காய் நகர்த்த துவங்கி இருக்கிறார். இதற்காக, சேலம் தொகுதியில் தோல்வி அடைந்த தன் மைத்துனர் சுதீஷுக்கு, மத்திய அமைச்சர் அல்லது குறைந்தபட்சம் ராஜ்ய சபா எம்.பி., பதவி வழங்க வேண்டும் என, நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ., மேலிட தலைவர்களிடம், விஜய காந்த் வலியுறுத்தி வந்தார். ஆனால், பா.ஜ., மேலிடம் தரப்பில், இதுவரையில் அதற்காக எந்த முயற்சியும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க, நேற்று காலை, சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜயகாந்த் டில்லி புறப்பட்டு சென்றார். அவருடன் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் சென்றனர். மைத்துனருக்கு, எப்படியும் பதவியை பெறுவது என்கிற முடிவுடன் டில்லி சென்றிருக்கும் விஜயகாந்த், அதற்கு வாய்ப்பில்லாத பட்சத்தில், மனைவிக்கு, மத்திய அமைச்சர் பதவிக்கு இணையான செல்வாக்குள்ள பதவியை பெற வேண்டும் என்ற துடிப்பில் உள்ளார். மோடி பதவி ஏற்பு விழா முடிந்ததும், தன் கோரிக்கையை மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்களிடம், விஜயகாந்த் வலியுறுத்த போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மைத்துனர் அல்லது மனைவிக்கு பதவியை பெற்ற பிறகு தான், விஜயகாந்த் தமிழகம் திரும்புவார் என்கின்றனர் கட்சியினர்.




ஆதரவும் ஆசியும்...:

இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரங்களில் கூறியதாவது: கட்சியை சிதைவில்லாமல் கொண்டு செல்ல, மைத்துனர் அல்லது மனைவிக்கு பதவி முக்கியம் என, கருதுகிறார் விஜயகாந்த். அதை, மோடியிடம் பதவியேற்பு விழா முடிந்ததும், வலியுறுத்தப் போவதாகவும் சொல்லிச் சென்றிருக்கிறார். தமிழக பா.ஜ., தரப்பிலும், இந்த முயற்சிக்கு ஆதரவும் ஆசியும் இருப்பதால், விஜய காந்த் எதிர்பார்ப்பது நடக்க வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: