வெள்ளி, 17 அக்டோபர், 2014

Parvez Mushraf: இந்தியாவுக்கு எதிராக போராட பாக். மக்களை தூண்ட வேண்டுமாம் ?

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிராக போராட பாகிஸ்தான் மக்களை தூண்ட வேண்டும் என அந்நாட்டு முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.< பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான முஷாரப் கடந்த 2008ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் நாடு கடத்தப்பட்டார். அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார். தற்போது அவர் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ''காஷ்மீரில் பாகிஸ்தானுக்கும் பங்கு உள்ளது. காஷ்மீருக்காக இந்தியாவுக்கு எதிராக போராட பாகிஸ்தான் மக்களை நாம் தூண்டிவிட வேண்டும். 1999ஆம் ஆண்டு போரின் போது ஆயிரக்கணக்கான மக்கள் போராட தயாராக இருந்திருந்தால் இந்தியா நப்பாசையுடன் இருக்காது. பாகிஸ்தானும் அன்று திரும்பி இருக்காது. காஷ்மீரில் நாம் இந்தியர்களுடன் சண்டையிடுகிறோம். ராணுவம் முன் புறமும், பின்புறமும் இருக்கிறது. உள்நாட்டில் நாம் வலுவாக இருந்தால் யாருக்கும் நம்மை குறி வைக்கும் தைரியம் வராது. நாம் அனைவரும் முஸ்லிம்கள். நாம் மற்றொரு கன்னத்தை காட்ட கூடாது. நாம் மற்றவர் கன்னத்தில் அறைய வேண்டும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கும், பாகிஸ்தானுக்கும் எதிரானவர். அவர் இன்னும் மாறவில்லை.  பாகிஸ்தான் ராணுவத்தினர்கள்அந்த நாட்டை உருப்படவே  விடமாட்டர்கள். இவர்மீதே பல வழக்குகள் அதிலிருந்து மீள காணோம் ? இந்தியாவுக்கு எதிராக  விஷம் கக்கியே தங்கள்  வயிறு வளர்த்த கூட்டம்தான்  இது, பாகிஸ்தான் மக்கள் தற்போது கொஞ்சம் விழித்து விட்டார்கள். இந்த மாதிரி பப்பு எல்லாம் முன்ன மாதிரி  இப்ப வேகாது ?


அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல், நமது கண்ணியத்தை நாம் காப்பாற்றியிருக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி இந்தியாவுக்கு மிக பிடித்த நாடு பாகிஸ்தான் என கூறுவது நகைச்சுவைக்குரியது'' என்றார். விகடன்.com

கருத்துகள் இல்லை: