புதன், 15 அக்டோபர், 2014

வெள்ளைக்கார துரையில் மீனாட்சி கலக்குவாரா ?


சென்னை; விக்ரம் பிரபு படத்துக்காக குத்தாட்டம் போட்டார் மீனாட்சி.‘துள்ளாத மனமும் துள்ளும்‘, ‘தீபாவளி‘, ‘பூவெல்லாம் உன் வாசம்‘, ‘மனம் கொத்தி பறவை‘, ‘தேசிங்கு ராஜா‘ படங்களையடுத்து எழில் இயக்கும் படம் ‘வெள்ளைக்கார துரை‘. விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா ஹீரோயின். ஒரே பிரச்னையில் சிக்கி தவிக்கும் நாயகனும், நாயகியும் அதில் இருந்து மீண்டு காதலில் இணைவதுதான் கதை. சூரி, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, நரேன், சிங்கம் புலி, மதன்பாப், சிங்க முத்து என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். அன்பு செழியன் தயாரிக்கிறார். கருப்பசாமி குத்தகைதாரர், அகம்புறம், மந்திர புன்னகை உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் மீனாட்சி இப்படத்துக்காக குத்தாட்டம் போட்டிருக்கிறார். நீண்ட நாட்களாக காணாமல் போயிருந்த மீனாட்சிக்கு இந்த வாய்ப்பு கைகொடுக்கும் என்று படக் குழுவினர் கூறுகின்றனர். - S.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: