ஹரியாணா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்
தளம் கட்சியின் (ஐஎன்எல்டி) தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலா, தில்லி திகார்
சிறை அதிகாரிகளிடம் சனிக்கிழமை சரணடைந்தார்.
ஹரியாணா முதல்வராக சௌதாலா இருந்தபோது, இளநிலை ஆசிரியர் நியமனத்தில் ஊழல் புரிந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர், தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் சிகிச்சை பெற வேண்டியிருப்பதாகக் கூறி ஜாமீன் பெற்றார்.
ஆனால் ஜாமீன் காலத்தில், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் அவர் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து ஜாமீன் விதிகளை சௌதாலா மீறிவிட்டதாக குற்றம்சாட்டி, அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், திகார் சிறை அதிகாரிகளிடம் சௌதாலாவை சனிக்கிழமை சரணடையும்படி உத்தரவிட்டது.
இதையடுத்து திகார் சிறை அதிகாரிகளிடம் சௌதாலா சனிக்கிழமை சரணடைந்தார்.
முன்னதாக தில்லியில் சௌதாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், "முந்தைய காங்கிரஸ் அரசைப் போன்று, பாஜக அரசும் சிபிஐயை தவறுதலாக பயன்படுத்துகிறது; ஜாமீன் விதிகளை மீறிவிட்டதாக குற்றம்சாட்டும்படி சிபிஐக்கு பாஜகதான் நிர்பந்தம் அளித்தது' என்று குற்றம்சாட்டினார்.dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக