சனி, 18 அக்டோபர், 2014

ஜெயலலிதாவையும் அதிமுகவினரையும் அம்பலபடுத்திய நீதிபதி குன்ஹாவை ஆதரித்து சென்னையில்

ஆர்ப்பாட்டம் சுவரொட்டி


  • ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவிற்குச் சிறை!
  • நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை வரவேற்போம்!
  • ஊழலில் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்யப் போராடுவோம்!சென்னை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டம்!
  • மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளியாக பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அதிமுக கட்சியினர் திட்டமிட்டு அனுதாப அலையினை உருவாக்க சட்டவிரோதமான முறையில் ‘போராட்டங்களை’ தூண்டிவிடும் நிலையில் அதனை அம்பலப்படுத்தும் வகையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னை கிளையின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்டோபர் 15 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது!
“ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவிற்கு சிறை!
நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை வரவேற்போம்!”
என்ற முழக்கத்தினை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களின் அறைகளுக்கு நேரடியாக சென்று துண்டுபிரசுரங்கள் விநியோகித்து மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.
பெரும்பாலான வழக்குரைஞர்கள் அதிமுக கட்சியினரின் சட்டவிரோத நடவடிக்கைகளின் மீது வெறுப்பு கொண்டிருந்தாலும், நேரடியாக பேச இயலாத தங்களின் இயலாமையை ஆதங்கமாக வெளிப்படுத்தினார்கள். பிரசுரங்களை பெற்றுக்கொண்ட அதிமுக கட்சி சார்ந்த வழக்குரைஞர்கள் பலரும் மவுனமாகவே இருந்து, தங்களுக்கும் தமது கட்சியினர் செய்வது நியாமல்ல என்பதை வெளிப்படுத்தினார்கள்.
ஒருவர் மட்டும் பிரசுரத்தை கசக்கி எறிந்து தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினார். பல வழக்குரைஞர்கள் எச்சரிக்கையாக இருங்கள், அதிமுக கட்சியினரால் உங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படலாம் என தங்களின் பயத்தையும் வெளிப்படுத்தினார்கள்.
நீதிமன்ற வளாகங்களில் கடந்து செல்கிறவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது! மக்கள் ஆர்வமாக படித்தனர்.
[துண்டறிக்கையை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]
திட்டமிட்ட நாளன்று அக்டோபர் 15 அன்று மதியம் 1.30 அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதிமுக கட்சியினர் ஏதாவது தகராறு செய்வார்கள் என்ற அச்சம் காரணமாக பொதுவான வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள தயங்கியும், கடந்த காலத்தில் கருணாநிதிக்கு கருப்புக்கொடி காட்டிய பொழுது திமுக குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளானது போன்று, தற்பொழுதும் அதிமுக குண்டர்களால் தாக்கப்படுவோமோ என்ற அச்சத்துடன் பெரும்பாலான வழக்குரைஞர்களும், பொதுமக்களுமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் அச்சங்கலந்த ஆர்ப்பாட்டத்துடன் ஆர்ப்பாட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.
  • ஜெயலலிதா போன்ற குற்றவாளிகளுக்கு
  • அனுதாபம் கொள்ளும் அடிமைத்தனத்தை உதறித்தள்ளுவோம்!
  • ஊழலில் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய போராடுவோம்!!
என்பதை முன்வைத்து எழுச்சிகரமான முழக்கங்களுடன், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னைக்கிளை இணைச்செயலாளர் தோழர் பார்த்தசாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்ட முழக்கங்கள் :
ஆதரிப்போம்! ஆதரிப்போம்!!
சொத்துக்குவிப்பு வழக்கினில்
கர்நாடக தனிநீதிமன்ற தீர்ப்பினை வரவேற்போம்!
உதறித்தள்ளுவோம்! உதறித்தள்ளுவோம்!!
அடிப்படையே இல்லாமல்
அனுதாபம் கொள்ளும் சிந்தனையை
உதறித்தள்ளுவோம்! உதறித்தள்ளுவோம்!!
பதினெட்டு ஆண்டாய் இழுத்தடித்த
சொத்துக்குவிப்பு வழக்கினில்
குற்றவாளிக்கு ஆதரவாக
அனுதாபம் கொள்வது அடிமைத்தனம்
ஊழலுக்கு எதிராக
போராடுவதே தன்மானம்!!
சமூகத்தை அழிக்கின்ற
மனித மாண்மை சிதைக்கின்ற
ஒழுக்கக்கேட்டின் தோற்றுவாய்
ஊழலுக்கு எதிராக உறுதியோடு போராடுவோம்!
அரசியல் ஆதாயத்திற்கு
நீதிமன்ற தீர்ப்புக்கெதிராய்
வன்முறையை தூண்டிவிட்ட
அதிமுக கட்சியினர் செய்த
பொதுச்சொத்துக்கள் சேதத்திற்கு
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
தமிழக அரசே!
நடவடிக்கை எடு!!
சொத்துக் குவிப்பு வழக்கினில்
நீதிமன்ற தண்டனையை
காவிரிப் பிரச்சனையுடன்
கோர்த்துவிட்டு அரசியல் செய்யும்
இனவெறியை தூண்டிவிடும்
கேவலமான பொய்ப்பிரச்சாரத்தை
முறியடிப்போம்! முறியடிப்போம்!!
தினந்தோறும் மக்கள் பணத்தை
கொள்ளையடிக்கும் திருடர்களான
ஆம்னி பஸ் முதலாளிகளும்
தனியார் கல்வி நிறுவனங்களின்
கொள்ளைக்கார முதலைகளும்
நீதிமன்ற தீர்ப்புக்கெதிராய்
போராடும் யோக்கியர்கள்!
நீதிமன்ற தீர்ப்புக்கெதிராய்
மக்களை போராட தூண்டும்
அதிமுக நிர்வாகிகளில்
கவுன்சிலர் பதவியைக்கூட
உதறித்தள்ள எவருமில்லை!
அரசு பஸ்ஸை கொளுத்தியவர்கள்
அவர்களின் காரை கொளுத்தவில்லை.
ஊழலுக்கு எதிரான
வரலாற்றுச் சிறப்புமிக்க
நீதிபதி குன்ஹாவின்
தீர்ப்பினை வரவேற்போம்
ஊழல் அரசியல்வாதிகள்
எந்தக்கட்சியில் இருந்தாலும்
தண்டனை பெற போராடுவோம்!
வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றன.
சரியான நேரத்தில், சரியான முறையில் ஜெயலலிதா, அதிமுகவினரை அம்பலப்படுத்தியுள்ளீர்கள் என்றும் எதிர்க்கட்சிகளாக உள்ள அரசியல் கட்சியினர் கூட போராட தயங்கும் நிலையில் துணிச்சலாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளீர்கள் என்று தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்கள். அநீதிகளுக்கு எதிராக போராடவேண்டும் என்ற நம்பிக்கையை வழக்குரைஞர்கள் மத்தியில் வளர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் இருந்ததாக கருத்து தெரிவித்தனர்.
தோழமையுடன்,
எஸ் ஜிம் ராஜ் மில்டன்செயலாளர், சென்னைக் கிளை
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு,வினவு.com

கருத்துகள் இல்லை: