சென்னை:'தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது என, கவர்னர்
ரோசய்யா பாராட்டி உள்ளார். இந்த பாராட்டுக்கு கிடைத்த பரிசு என்னவோ' என,
தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது
அறிக்கை:தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது என, கவர்னர்
பாராட்டி உள்ளார். அமைச்சர் ரமணாவின் தம்பி, அவருடைய கட்சியினரால் கொலை
செய்யப்பட்டு உள்ளார். கோவையில் அய்யம்மாள், லட்சுமி என, இருவர் நகைக்காக
கொலை செய்யப்பட்டு உள்ளனர்.வேளச்சேரியில், மாநகராட்சி ஊழியர் வீட்டில், 20
சவரன் நகைகளும், மறைமலை நகரில், இன்ஜி., வீட்டுப் பூட்டை உடைத்து, 60 சவரன்
நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.அம்பத்தூரில், தமிழ்மணி,
மீஞ்சூரில் கான்ட்ராக்டர் விஸ்வால், கூடுவாஞ்சேரியில் முத்து,
பொன்னேரியில் குஜராத் வாலிபர் ஒருவர் ஆகியோர், கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
திருவாடானை அருகே சையது முகமது, காவல் நிலையத்தில், போலீசார் ஒருவரால்
சுட்டுக் கொலை செய்யப்பட்டு உள்ளார். இவ்வளவும் ஒரே நாளில் நடைபெற்ற சட்டம்
- ஒழுங்கு பிரச்னைகள். ஆனால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக
உள்ளது என, கவர்னர் பாராட்டியிருக்கிறார். இந்த பாராட்டுக்கு கிடைத்த பரிசு
என்னவோ.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார். தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக