The 2G spectrum scam is the BJP's favourite stick to beat the ruling combine but now the scam could boomerang on itself as the CBI has registered an FIR into spectrum allocation during BJP leader late Pramod Mahajan's tenure as telecom minister. CBI believes Pramod Mahajan allegedly caused a Rs 565 crore loss over 6 years.
the period of 2001-2007, starting with Mahajan's term as the telecom minister. Mahajan was replaced by Shourie in early 2003, while Maran was handed the steering of the telecom ministry after the UPA was voted to power at the Centre in May 2004. http://articles.economictimes.indiatimes.com/2011-08-20/news/29909350_1_shourie-and-dayanidhi-maran-spectrum-scam-2g
'2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், வெளிவராத உண்மைகள் குறித்து, புத்தகம் எழுதப் போவதாக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராஜா தெரிவித்து உள்ளார்.
நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக, இவர் எழுதப் போகும் புத்தகம், பாஜக , காங்., மற்றும் தி.மு.க.,வில் பெரும் புயலை கிளப்பும் என, அஞ்சப்படுகிறது.காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜா. தி.மு.க.,வை சேர்ந்த இவரது பதவிக் காலத்தில், தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு, '2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதில், 1.76 கோடி ரூபாய் அளவுக்கு, வருவாய் இழப்பு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து, சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், ராஜா, தி.மு.க., எம்.பி., கனிமொழி, சாகித் பல்வா, கரீம் மொரானி உட்பட, 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. 9 தனியார் நிறுவனங்கள் மீதும், குற்றம் சாட்டப்பட்டன. ஏன் பிரமோத் மகாஜன் , அருண் ஜெட்லி தயாநிதி மாறன் பெயர்கள் சேர்க்க படவில்லை ? வாஜ்பாய் காலத்தில இருந்து ஆரம்பிக்கப்பா! இது முழுக்க முழுக்க ஆதிக்க ஜாதியினால் திராவிட கருத்துக்கும் தலித்துக்கும் எதிராக கதை வசனம் எழுதப்பட்ட திரைப்படம்தான் .
விசாரணை: உச்ச நீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில், இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அனைத்து தரப்பு வாதமும் முடிந்துள்ள நிலையில், மத்திய அமலாக்கத் துறை, தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, தற்போது நடந்து வருகிறது.அடுத்த ஆண்டு ஆரம்பத்திலேயே, இந்த வழக்கில் தீர்ப்பு வந்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்திருக்கும் ஆ.ராஜா, இந்த விவகாரம் தொடர்பாக, புத்தகம் எழுதப் போவதாக கூறி உள்ளார்.
இதுகுறித்து, அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:இந்த வழக்கு விசாரணையில், முக்கிய வாதம் முடிந்துள்ளது. அதனால், எனக்கு போதிய நேரம் கிடைத்துள்ளது. இந்த நேரத்தை பயன்படுத்தி, புத்தகம் எழுத திட்டமிட்டு உள்ளேன். அடுத்த ஆண்டு ஜனவரி வாக்கில், புத்தகத்தை வெளியிடலாம் என, எண்ணியுள்ளேன். தீர்ப்பு வரும் நேரத்தில், புத்தகமும் வெளியானால் நல்லதாக இருக்கும் என, கருதுகிறேன். இதுதொடர்பாக, சில பதிப்பகங்களுடன் பேசி வருகிறேன். இந்த புத்தகத்தில், எதையெல்லாம் எழுதலாம் என்பதை, நான் வரையறுத்து வைத்துள்ளேன். அதெல்லாம் என் மூளையில் உள்ளது. இதுவரையில், வெளியில் நான் யாரிடமும் கூறாத விஷயங்கள், இதில் இடம்பெறும்.
ஆதிக்கம்: என் பதவிக் காலத்தில், நான் மேற்கொண்ட முழு பயணமும், இதில் இருக்கும். 1992ல், பெரம்பலுாரில், என் அலுவலகத்தில் முதல் லேண்ட் - லைன் தொலைபேசி இணைப்பு பெற்றதில் இருந்து, இன்றைக்கு தொலைத் தொடர்புத் துறையில் ஆதிக்கம் செலுத்தும், தனியார் மொபைல் போன் நிறுவனங்களின் கூட்டணி வரைக்கும், இந்த நுால் அலசி ஆராயும். என் பதவிக் காலத்தில், இந்த ஆதிக்கத்தை கட்டுப்படுத்த, நான் எடுத்த கடும் நடவடிக்கைகளும், இதில் நிச்சயம் இடம் பிடிக்கும்.
நீதிமன்ற விசாரணையின் போது, வழக்கறிஞர்கள் கவனிக்கத் தவறிய விஷயங்கள், நீதிபதிகளின் பங்களிப்பின் முக்கியத்துவம் என, இந்த வழக்கு தொடர்பாக, சட்டரீதியான அனைத்து அம்சங்களும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே, புத்தகம் எழுதப் போகிறேன்.இவ்வாறு, ஆ.ராஜா தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே, இந்த வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய், 'நான் ஒரு கணக்காளர் மட்டுமல்ல' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். அதில், 'முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், '2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு பொறுப்பாளி' என, குறிப்பிட்டிருந்தார்.
- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக